Wednesday, 16 March 2016

ஐரோ.அபிவிருத்தி ஆணையாளர் அமைச்சர் மங்களவுடன் பேச்சு!

ஐரோ.அபிவிருத்தி ஆணையாளர் அமைச்சர் மங்களவுடன் பேச்சு!
ஐரோ.அபிவிருத்தி ஆணையாளர் அமைச்சர் மங்களவுடன் பேச்சு!
இலங்கைக்கு மூன்றுநாள் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டு நேற்று கொழும்பு சென்றடைந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் அனைத்துலக ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்திக்கான ஆணையாளர் நிவென் மிமிகா இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவைச் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.

இச்சந்திப்பில் இலங்கையின் அபிவிருத்திக்கு ஆதரவான இரண்டு திட்டங்கள் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்துடன் புரிந்துணர்வு உடன்பாடுகளைக் கைச்சாத்திடுவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தினால் அபிவிருத்திக்காக வழங்கப்படும் உதவிகளுக்குப் பொறுப்பானவரான நிவென் மிமிகா இலங்கையில் தங்கியிருக்கும் போது அரசாங்க அதிகாரிகள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.
Loading...