Saturday, 26 March 2016

பல்மைரா நகரில் சண்டை தீவிரம்

மத்திய கிழக்கில் மிக முக்கியமான பழங்கால நகரங்களில் ஒன்றான பல்மைராவில் சிரிய அரசுப் படைகளுக்கும் ஐஎஸ் குழுவினருககும் இடையில் மிகத் தீவிரமான சண்டை நடந்துவருகிறது.
Image copyright
Image captionபல்மைரா நகரில் சிரிய அரசுத் துருப்புக்கள்.
பல்மைராவின் புதிய நகரைக் கைப்பற்றுவதற்கான ரஷ்ய வான் தாக்குதல்கள், அரசுக்கு ஆதரவான யுத்தக்குழுக்கள் ஆகியவற்றின் உதவியுடன் சிரிய ராணுவம் பல்வேறு முனைகளில் தாக்குதல் நடத்திவருகிறது.
இந்தப் பகுதி கடந்த ஆண்டில் ஐஎஸ் வசம் வீழ்ந்தது.
Image copyright
Image captionரஷ்ய வான் தாக்குதல் உதவியுடன் பல்மைராவை மீட்க சிரியா போராடிவருகிறது.
அந்த நகர் மீது ராணுவ டாங்குகளும் எந்திரத் துப்பாக்கிகளும் தாக்குதல் நடத்துவதால் அந்தப் பகுதியே புகைமண்டலமாகக் காட்சியளிக்கும் காட்சிகள் தற்போது வெளிவந்துகொண்டிருக்கின்றன.
பழங்கால இடிபாடுகளுக்கு அருகில் உள்ள குன்றின் மீது இருந்த 13ஆம் நூற்றாண்டு கோட்டை ஒன்றை இவ்வாரத் துவக்கத்தில் சிரியப் படைகள் கைப்பற்றின.
Loading...