ஜப்பானில் அகதித் தஞ்சம் நிராகரிக்கப்பட்டவர்களில் பெரும் எண்ணிக்கையிலானோர் அதிகாரிகளின் தீர்மானத்திற்கு எதிராக கடந்த ஆண்டு மேன்முறையீடு செய்துள்ளதாக கியாடோ செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
கடந்த ஆண்டு ஜப்பானில் அகதித் தஞ்சம் கோரி விண்ணப்பத்திருந்த 7500க்கும் அதிகமான விண்ணப்பங்களில் 27 பேருக்கு மாத்திரம் அகதித் தஞ்சம் வழங்கப்பட்டதாக ஜப்பான் பாதுகாப்பு அமைச்சு கூறியிருப்பதாக கியோடோ தெரிவித்துள்ளது.
மேலும் 13,000 பேர் அகதித் தஞ்சம் கோரி விண்ணப்பத்துவிட்டு முடிவிற்காக காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகதித் தஞ்சக் கோரிக்கை விண்ணப்பம் பரிசீலிக்கப்படும் நிலையில் அதில் சிலருக்கு வேலை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதேவேளை ஏனையோர் தடுப்பு நிலையங்களை விட்டு வெளியே போகக் கூடாது என்ற கட்டுப்பாடுகள் உள்ளன. அங்கு நெருக்கடியாக உள்ளதாக சிலர் சாடுகின்றனர்.
