Monday, 28 March 2016

ஐ.தே.கவின் மறுசீரமைப்பு பணி ஆரம்பம்

ஐ.தே.கவின் மறுசீரமைப்பு பணி ஆரம்பம்
ஐ.தே.கவின் மறுசீரமைப்பு பணி ஆரம்பம்
ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் அடுத்த வாரத்திலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளதாக அக்கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனையின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ள இந்நடவடிக்கையின் போது,  கட்சியின் இரண்டாம், மூன்றாம் தலைமைகளுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிரேஷ்ட அமைச்சர்கள் அரசாங்கத்தை வழிநடத்திச் செல்லும் போது கட்சியின் இளம் உறுப்பினர்கள் அதனுடன் தொடர்புடைய பொறுப்புகளை ஏற்று செயற்படுத்தலை பிரதானமாகக் கொண்டு இம் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...