ஏமெனில் ஒரு வருடத்திற்கு முன்பாக அமைக்கப்பட்ட அரசை நிலைநிறுத்த சவூதி அரேபியா தலைமையில் நடத்தப்பட்டுவரும் தாக்குதலைக் கண்டித்து தலைநகர் சனாவில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஊர்வலம் ஒன்றை நடத்தியுள்ளனர்.
சனா நகர் தற்போது ஹௌதி கிளர்ச்சியாளர்கள் மற்றும் முன்னாள் அதிபர் அலி அப்துல்லா சலேவின் ஆதரவாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்துவருகிறது.
சலேவின் கட்சியே இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. சபீன் சதுக்கத்தில் நடந்த கூட்டத்திலும் சலே கலந்துகொண்டார்.
ஏமென் முழுவதும் தற்போது நடந்துவரும் யுத்தத்தில் கடந்த ஆண்டில் 6,300 பேர் வரை இறந்திருப்பதாக ஐ.நா. தெரிவித்திருக்கிறது.
