Thursday, 24 March 2016

உள்ளூராட்சிமன்ற தேர்தல்கள் பிற்போடப்படமாட்டாது - பைசர் முஸ்தாபா


கட்சி இரண்டாக பிளவுபடுவதை தடுப்பதற்காக உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் பிற்போடப் படமாட்டாது என்று மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் பைசர் முஸ்தாபா கூறினார். 

இது தொடர்பாக ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் முன்வைக்கும் வெவ்வேறான குற்றச் சாட்டுக்களை முற்றாக நிராகரிப்பதாக அமைச்சர் கூறினார். 

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் என்ற வகையில் தனது பொறுப்பு அரசியல் கட்சிகளை பாதுகாப்பது அல்ல என்றும் மக்களின் ஜனநாயக உரிமையை பாதுகாப்பதே என்றும் அமைச்சர் கூறினார். 

எல்லை நிர்ணய மேல்முறையீடுகளை பரிசீலனை செய்து பிரச்சினைகள் தீர்க்கப்பட்டதன் பின்னர் தேர்தலை நடாத்த எதிர்பார்ப்பதாக அவர் கூறினார். 

அந்த மேல்முறையீடுகளை பரிசீலனை செய்து பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தேவையான கால அவகாசத்தை வழங்குமாறு அமைச்சர் பைசர் முஸ்தாபா அரசியல் கட்சிகளிடம் கேட்டுக்கொண்டார். 
Loading...
  • தத்தளிக்கும் ஹக்கீம்10.08.2015 - Comments Disabled
  • பாயு மொளி நீ யெனக்கு30.03.2017 - Comments Disabled
  • GENEVA CONFERENCE - ADVANCE RESEARCH FOR DEVELOPMENT OF HUMANITY28.05.2015 - Comments Disabled
  • தக்காளி துவரம்பருப்பு சூப்06.01.2016 - Comments Disabled
  • சிட்டுக்குருவி17.05.2015 - Comments Disabled