Thursday, 24 March 2016

சம்பூரில் கடற்படையினர் வசமிருந்த காணிகள் ஒப்படைப்பு!


திருகோணமலை, சம்பூர் பிரதேசத்தில் கடற்படையினர் வசமிருந்த 177 ஏக்கர் காணிகள் வெள்ளிக் கிழமை பொதுமக்களிடம் கையளிக்கப்படவுள்ளன. இவ்வாறு விடுவிக்கப்படும் காணியில் 546 குடும்பங்கள் மீள்குடியேறவுள்ளன' என திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான என்.ஏ.ஏ. புஷ்பகுமார தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், 'இதன்போது, சம்பூர் மகா வித்தியாலயம் அமைந்திருந்த காணியும் விடுவிக்கப்படும். இக் காணிகளை மக்களுக்கு கையளிக்கும் வைபவம் வெள்ளி காலை 10 மணிக்கு சம்பூரில் நடைபெறவுள்ளது. இதில், எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் விவகார அமைச்சர் டி.எம். சுவாமிநாதன், கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்ணான்டோ, கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் உட்பட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்” எனவும் அவர் தெரிவித்தார்.


Loading...