Wednesday, 16 March 2016

முஸ்லிம் காங்கிரஸ் மன்னன் மற்றக் கட்சிகள் குறுநில மன்னர்களே NDPHR கருத்து

பாலமுனையில் முஸ்லிம் காங்கிரஸ் மகா நாடு பற்றி தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி இஸ்தாபகர் மொஹிடீன் பாவாவிடம் கருத்துக் கேட்டபோது அவர் பின் வருமாறு அவரது கருத்தை சுருக்க மாகக் கூறினார் கூறினார் 

தற்போதுள்ள இக்கட்டான  முஸ்லிம்களின்  அரசியல் சூழல்  ஒரு போர்க் காலமாகவே கருதப் பட வேண்டும் அதுவே முஸ்லிம் சமூகம் சிந்திக்க வேண்டிய விடயம்  எது எவ்வாறு இருப்பினும் முஸ்லிம் காங்கிரசை மன்னன் என்றும் மற்றக் கட்சிகள்  மற்றும் அமைப்புகள்  மன்னனின் கீழ் வரும் குறு நில மன்னர்களே  என்று கொள்ளப் படவேண்டும். போர்க் களத்தில் மன்னன் தோற்றால் அத் தோல்வி குறுநில மன்னர்களுக்கும் தோல்வியே.போர் முடியும் வரை  எதிரிகளுக்கு காட்டிக் கொள்ளக் கூடாது நமது  பிரிவினையை மன்னன் கொடியவன் ஆனாலும் சரியே . எமது சமூகத்துக்கு இரண்டு எதிரிகள் போர் கடிமையாவே இருக்கும் இந்த நிலையில்  குறு நில  மன்னர்கள் மன்னனுக்கு எதிராக குழி பறிப்பது நன்றல்ல என்றே கருதுகிறேன் 

எதிரிகளுக்கு முஸ்லிம் சமூகத்தின் பிரிவினையைக் களத்தில்  காட்டாது எமது பலத்தைக் காட்டவேண்டும் என்பதுதான் என் கருத்து.

ஆனால் எதிரிகளுடனான போர் முடிவில் மன்னனுடன் குறு நில மன்னர்கள் போர் புரியலாம்  

நான் இங்கு கூறியது உங்களுக்கு விளங்கி இருக்கும் என்றே நினைகிறேன் 






Loading...