தமிழர்களுக்கான சுய நிர்ணய உரிமை வழங்கப்பட வேண்டும்!
தமிழர்களின் அபிலாசைகள் நிறை வேற்றப்பட்டு, அவர்களுக்கான சுய நிர்ணய உரிமை வழங்கப்பட வேண்டும் என பிரித்தானியாவின் எதிர்க்கட்சித் தலைவர் ஜேம்ஸ் பெரி தெரிவித்துள்ளார்.
சித்திரைப் புத்தாண்டினை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,இப் புது வருடத்தில் ஐ.நா சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நீதி தொடர்பான பொறிமுறை நம்பகரமானதகவும் சுதந்திரமானதகவும் செயற்படுவதை உறுதிப் படுத்துவதுடன் தமிழர்களின் அரசியல் தொடர்பான அபிலாசைகள் நிறைவேற்றப்பட்டு தமிழர்களுக்கான சுய நிர்ணய உரிமை வழங்கப்படல் வேண்டும்.
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தமிழர்களின் நிலங்களை மீள ஒப்படைத்தல் மற்றும் இராணுவ வெளியேற்றம் தொடர்பாக சர்வதேசத்திற்கு வழங்கிய உறுதி மொழிகளை மதிக்க வேண்டும் என்பதை நாம் உறுதிப்படுத்த வேண்டும்.
அத்துடன் பிரித்தானிய அரசும், தமிழ் மக்களும் வெறும் வாக்குறுதிகள் மட்டுமல்லாது அவை நடை முறைப்படுத்த வேண்டும் என எதிர் பார்க்கின்றனர் என்று மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.