Thursday, 28 April 2016

சிரியா பேச்சுக்களில் அமெரிக்கா மற்றும் ரஷ்யா தலையிட வேண்டும்

தடுமாறிக்கொண்டிருக்கும் சிரியா சமாதானப் பேச்சுக்களை காப்பாற்ற உயர்மட்டத் தலையீட்டை செய்யுமாறு அமெரிக்காவையும் ரஷ்யாவையும் சிரியாவுக்கான ஐநா தூதுவர் கேட்டிருக்கிறார்.
சிரியா பேச்சுக்களில் அமெரிக்கா மற்றும் ரஷ்யா தலையிட வேண்டும்
Image captionசிரியா பேச்சுக்களில் அமெரிக்கா மற்றும் ரஷ்யா தலையிட வேண்டும்
சிரியாவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பாதியளவிலான போர் நிறுத்தம் அங்கு மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக, சமாதான பேச்சுக்கள் குறித்து பாதுகாப்பு கவுன்ஸிலுக்கு விளக்கமளித்த ஸ்டஃபோன் த மிஸ்துரா கூறியுள்ளார்.
போர் நிறுத்தம் அமலில் இருந்தாலும் சிரியாவில் அண்மைய நாட்களில் வன்செயல்கள் அதிகரித்துள்ளன.
அலெப்போவின் கிழக்கு பகுதியில் மருத்துவமனை மற்றும் அதனை அண்பித்த குடியிருப்புக்களின் மீது அரசாங்க படைகள் நடத்திய தாக்குதலில் புதனன்று 20 பேராவது கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
இறந்தவர்களில் சிறுவர்கள், ஒரு பல் மருத்துவர் மற்றும் அங்கு எஞ்சியிருந்த ஒரேயொரு குழந்தை நல மருத்துவர் ஆகியோர் அடங்குவதாக கூறப்படுகின்றது.
Loading...