Thursday, 28 April 2016

புகைப் பழக்கத்தை கைவிட இ-சிகரெட் உதவும்': பிரிட்டிஷ் ஆய்வு

Image copyrightAFP
Image captionபுகைப் பழக்கத்தை துவங்குவதற்கு இந்த இ-சிகரெட்டுக்கள் காரணமாவதாக முன்னர் விடுக்கப்பட்ட எச்சரிக்கைகள் அடிப்படையற்றவை என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது
புகை பிடிப்பவர்களை அந்தப் பழக்கத்தை கைவிட வைப்பதற்கு, இ-சிகரெட் எனப்படும் மின்னணு சிகரெட்டை பயன்படுத்த ஊக்குவிக்குமாறு பிரிட்டனில் நடந்துள்ள ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
புகையிலை சிகரெட்டுக்களை புகைத்துவந்த ஆயிரக் கணக்கானவர்கள் இந்த இ-சிகரெட் மூலம் புகைப் பழக்கத்தைக் கைவிட்டுள்ளதாக த ராயல் காலேஜ் ஆஃப் பிசிஸியன்ஸ் அமைப்பினர் கூறுகின்றனர்.
இதனால், அவர்களின் உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
புகைப் பழக்கத்தை துவங்குவதற்கு இந்த இ-சிகரெட்டுக்கள் காரணமாவதாக முன்னர் விடுக்கப்பட்ட எச்சரிக்கைகள் அடிப்படையற்றவை என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
ஆனால், இ-சிகரெட்டினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் தொடர்பில் முழுமையான ஆய்வுகள் நடத்தப்பட வேண்டியுள்ளதாக பொதுச் சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.
Loading...