Tuesday, 12 April 2016

வடமாகாண சபையின் அரசியலமைப்பு விவாதம் ஒத்திவைப்பு

வடமாகாண சபையின் அரசியலமைப்பு விவாதம் ஒத்திவைப்பு
வடமாகாண சபையின் அரசியலமைப்பு விவாதம்   ஒத்திவைப்பு
புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பாக வடமாகாண சபையினால் கடந்தவாரம் முன்வைக்கப்பட்ட யோசனைகள் மீதான விவாதம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. வடமாகாண சபையினால் கடந்த வாரம் சமர்ப்பிக்கப்பட்ட அரசியலமைப்பு சீர்திருத்தம் குறித்த வடமாகாண சபையின் யோசனைகள் முழுமை பெறாத காரணத்தினால் அதன் மீதான விவாதத்தை ஒத்தி வைப்பதாக அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். 

வடமாகாண சபையின் 49 வது விஷேட அமர்வு இன்று காலை கைதடியில் உள்ள வடமாகாணசபை கட்டிடத்தில் ஆரம்பமானது. தழிழ் மக்களுக்காக வடமாகாண சபையினால் தயாரிக்கப்பட்ட அரசியல் தீர்வு மற்றும் அரசியல் யாப்புக்கான கொள்கை வரைவுத்திட்டம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனினால் கடந்த வியாழக்கிழமை வடமாகாண சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. 
Loading...