சிங்கள தமிழ் புத்தாண்டாகிய இந் நாளில் ஒற்றுமையுடனும் சகோதரத்துவத்துடனும் நாட்டை அபிவிருத்திப் பாதைக்கு இட்டுச்செல்ல அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம்.இது இலங்கையில் வாழும் இரு இன மக்களின் மிக முக்கியமான கலை கலாசாரப் பண்டியையாகும். இயற்கையுடன் ஆன்மீக ரீதியாக பின்னிப் பிணைந்து வாழ்வதற்குப் பழக்கப்பட்டுள்ள இலங்கையர்களுக்கு புத்தாண்டு என்பது தேசிய ஒற்றுமை சகோதரத்துவம் சமத்துவம் மகிழ்ச்சி செளபாக்கியம் என்பவற்றை விருத்தி செய்யும் தேசியத் திருநாளாகும்.
எமது தாய் நாட்டில் வாழும் சகலரும் ஒருதாய் வயிற்று பிள்ளைகளாக வாழ்ந்து எமது நாட்டையும் வீட்டையும் சகல வளமும் நிம்மதியுமான இடமாக மாற்ற தமது முழுப்பங்களிப்பை வழங்க இந்நாளில் உருதிபுனுவோமாக. இயற்கையும்,நல்ல வளங்களையும் கொண்ட எமது நாட்டில் சில தீய சக்திகளின் சுயநலமிக்க போக்கிற்காக எம்மக்கள் மத்தியில் பல விசமிக்க கருத்துக்களை பரப்பி பல இடர்களை சந்திக்க வைத்திருந்தவற்றை யெல்லாம் நாம் மறவோம்.
இப்படியான தீய சக்திகளின் சூழ்ச்சிகளை தகர்த்து சகலரும் தமது சகோதரத்துவத்தை பேணி சுபிட்சமான இலங்கையை கட்டியெழுப்ப முன்வருவோம் என தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியின் தேசிய புத்தாண்டு வாழ்த்துச்செய்தியில் அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் அல்ஹாஜ் நூருல் ஹுதா உமர் தெரிவித்துள்ளார்.

