ஐ.தே.கவின் மே தினக் கூட்டத்திற்கு 4 இலட்சம் ஆதரவாளர்கள்!
ஐக்கிய தேசிய கட்சியின் மேதினக் கூட்டத்திற்கு 4 இலட்சம் ஆதரவாளர்கள் வருகை தருவார்கள் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்ட கட்சி அமைப்பாளர்கள் இதற்கான வேலைகளை நிறைவு செய்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் நிர்வாக குழு அதிகாரியும், மேல்மாகாண சபையின் எதிர்க் கட்சித் தலைவருமான மஞ்சு ஸ்ரீ அறங்கல தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஒவ்வொரு தொகுதிகளில் இருந்தும் ஆக குறைந்தது 1500 கட்சி அங்கத்தவர்கள் கலந்து கொள்வார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
