Saturday, 30 April 2016

கிழக்கில் நிகழப்போகும் மாற்றங்கள் NDPHR

ஒரு பக்கம் அரசியல், மறுபக்கம்  அவர்களின்  புகழ் பாடும் சுவரொட்டிகள். அரசியல்வாதியாகட்டும், அல்லது ஆன்மீகவாதியாகட்டும் அவர்கள் பேச்சுக்கு மக்கள் பெருவாரியாக கூடுகிறார்கள். அவர்கள் சொல்வதை ஆர்வமுடன் கேட்கிறார்கள்; கை தட்டுகிறார்கள்.

இந்த அரசியல் வாதிகளின் செல்வாக்கைப் பார்க்கும்போது கூடவே வீதியோர குப்பையும், சாக்கடைகளும்,உள்ளூர் பாதைகளும்  கூடவே மணக் கண் முன் ஓடுகிறது . இவர்கள் பேச்சை மக்கள் ரசிக்கிறார்கள். இவர்களை மக்கள்  மிக மதிக்கிறார்கள். மக்களிடையே இவர்களின் சக்தி அளவிட முடியாதது. தங்கள் கொள்கைகளைப் பரப்பவோ, பதவிகளைப் பிடிக்கவோ பிரசாரம் செய்யும் இவர்கள் தங்கள் சொற் பொழிவுகளுக்கு நடுவே ஏன் சுத்தம், சுகாதாரமான வாழ்க்கையின் மேம்பாடுகளையும் அவசியத்தையும் எடுத்து சொல்லக்கூடாது? இவர்கள் சொல்வதை வேத வாக்காக எடுத்துக் கொள்ளும் மக்கள், இவர்கள், கல்வி, சுகாதாரம் போன்றவற்றை வலியுறுத்தினால் நிச்சயம் ஓரளவாவது பின்பற்றுவார்களே?

குறை யாரிடத்தில்? சொல்பவரிடமா? பெறுபவரிடமா? எனக்கு தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்.

கிழக்கில் நிகழப்போகும் மாற்றங்கள் இப்படிபட்ட அரசியல்,  முக்கியபுள்ளிகள் மூலம் நடப்பதில்லை; நடக்கபோவதில்லை. மாற்றங்கள்  சாதாரண  மக்களின் மனங்களில் உதிக்கும் எண்ணப் பொறிகளில் தாம் மாற்றங்களின் ஆரம்பம் இருக்கிறது.

தற்கால அரசியவாதிகளின் போக்கு பற்றி கேட்டபோது மேற் கண்டவாறு தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி இஸ்தாபகர் மொஹிடீன் பாவா கூறினார் 












Loading...