அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிடவுள்ள ஹிலாரி கிளிண்டனுக்கு ஒன்ராறியோ முதல்வர் கத்தலின் வின் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்த கத்தலின் வின், எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் வெற்றிபெற்றால் அமெரிக்காவின் சிறந்த ஜனாதிபதியாக விளங்குவார் என்பதுடன் அமெரிக்க ஜனாதிபதிக்கு தகுதியான ஒருவர் எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஹிலாரி கிளிண்டனுக்கு தனது ஆதரவினை தெரிவிப்பதாகவும் கத்தலின் வின் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளராக தேர்வாகியுள்ள குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் போன்றவர்கள் அமெரிக்க அதிபர் பதவிக்கு வருவது தொடர்பிலும் ஒன்ராறியோ முதல்வர் கத்தலின் வின் அச்சம் வெளியிட்டுள்ளார்.
-
