Tuesday, 14 June 2016

நிதி நியதிச்சட்ட அறிக்கை எதிர்ப்பின்றி அங்கீகாரம்!

நிதி நியதிச்சட்ட அறிக்கை எதிர்ப்பின்றி அங்கீகாரம்!
நிதி நியதிச்சட்ட அறிக்கை  எதிர்ப்பின்றி அங்கீகாரம்!


வடமாகாண சபையில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் சமர்ப்பிக்கப்பட்ட நிதி நியதிச்சட்ட அறிக்கை எவ்வித எதிர்ப்பும் இன்றி சபையில் 




அங்கீகரிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

வடமாகாண சபையின் 54ஆவது அமர்வு, கைதடியில் அமைந்துள்ள வட மாகாண சபை அலுவலகத்தில், அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணிக்கு ஆரம்பமாகியது.
இதன்போது முதலமைச்சரினால் குறித்த பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது. குழுநிலை விவாதத்தின் பின்னர், சிறு திருத்தங்களுடன் குறித்த பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதனை முதலமைச்சர் முன்மொழிந்திருந்த நிலையில், வடமாகாண சபையில் எதிர்க்கட்சி தலைவர் எஸ்.தவராசா அதனை வழிமொழிந்தார். அதற்கமைய எவ்வித எதிர்ப்புகளுமின்றி குறித்த பிரேரணை அங்கீகரிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் காங்கேசன்துறையில் அமைக்கப்பட்ட சகல வசதிகளும் பொருந்திய கட்டத்தை, வட மாகாண சபைக்கு கையளிக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தும் பிரேரணையும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
Loading...