Sunday, 26 June 2016

பெண்களே “கண்கள்!“ அழகுநோக்கிய அபாயம்?

விஜிதா லோகநாதன், ஜெர்மனி.
இன்றைய உலகம் விளம்பரயுக்திகளுக்குள் கட்டுண்டுகிடக்கிறது. உணவு முதல் kosmetikவைத்தியம், அழகு முதல் ஆடைகள், அநாவசிய தேவைகள்- சேவைகள் என அனைத்திலுமே விளம்பர இருட்டையே வெள்ளொளியாகக் கருதவைத்துவிட்டார்கள். சுவாசக்காற்றும் பைகளில் அடைத்து விற்பனைக்கு வந்தாற் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை. இலகுவாக இலவசமாகக் கிடைக்வுள்ள மனிதவளம் அனைத்தையும் வர்த்தக்குழுமங்கள் தம் லாபத்தேவைக்காகக் காவுகொண்டுவிட்டன.

அதிலும் ஆண்களைவிட விசேடமாகப் பெண்கள் விளம்பர வலைக்கண்களுக்குள் வேடன் வலையின் மான்களாகச் சிக்கிக்கொண்டனர். அழகு என்பது பெண்களுக்கு உணவை, நீரை விடவும் முக்கியமாகப் பார்க்குமளவுக்கு கற்பிதப்படுத்திய கலை-கலாச்சாரப் பாங்குகளும் இன்றைய விளம்பர வர்த்தகர்களுக்கு பெரிதும் துணைநிற்கின்றன.

இந்தவகையில் இன்றைய இளம் தலைமுறைப் பெண்கள் மட்டுமல்ல தாய், பேத்தியரும் கூட அழகுபடுத்துகிறோம் என்ற பெயரில் தம் ஆயுள்நீட்சியையும், ஆரோக்கியத்தையும் அழிப்பதோடு பணத்தையும், நேரத்தையும் வீண்விரயம் செய்கிறார்கள்.

அழகுநிலைய (Beauty Parlor)ங்கள் சந்திக்கு சந்தி தெருவுக்கு பத்து எனப் பெருகிவருகின்றன. குறைந்த நாட்கள் பயிற்சி, குறைந்த முதலீடு என்பதால் வேலையற்றிருக்கும் பெண்களும் இதைத் தொழிலாக்கிக்கொள்ள முனைவதால் கிராமங்களிலும் குடிசைக் கைதொழிலாக வியாபித்துவிட்டிருக்கிறது.

இதைதொட்டு ஒப்பனைப்பொருட்கள் (Kosmetik) உற்பத்தி அது தொடர்பான விற்பனைகளும் லாபமீட்டும் அதிக வழிகளாக அறியப்பட்டுவிட்டன.

ஓப்பனைபொருட்களினதும் அவைகள் அகற்றி (Remover)களினதும் தரமென்பது தாக்கமான இரசாயனங்களின் பங்களிப்புடனே தான் தயாராகின்றன. இந்த இரசாயனங்களின் தாக்கம் என்ன? எவ்வளவு காலத்தில் இவை வெளிப்படும் என்பதுபற்றிய ஆய்வுகளோ, மனித உடல் உறுப்புகள் அமைப்புகள் பற்றிய அறிவோ இத் தொழில் செய்பவரிடமோ, இதற்காகப் போகும் பெண்களிடமோ இதுவரை தெரிந்திருக்க வாய்ப்பேயில்லை.
பிளாஸ்டிக் யன்னல் சட்டங்கள், பொருட்களின் மேற்தளங்களில் அகற்றமுடியாத கறை, புகைப்படிவுகளிருந்தால் நகங்களில் மை அகற்றும் சுநஅழஎநசஐ சிறிய பஞ்சிலெடுத்துப் போட்டுப்பாருங்கள் ஒற்றைப் பாவனையோடு பளிச்சென்றிருக்கும். காரணம் நுண்ணிய மேற்படையோடு சேர்த்தே அழுக்கைக் அகற்றுகிறது என்பதுதான் உண்மை.
நகங்கள், முடிகள் இறந்த கலப்படைகள் என்றாலும் அவை அடியிலிருந்து தள்ளப்படுவதால் தலை, விரல் நுனிகளில் உள்ள உயிர்க்கலங்களுடன் இணைப்பிலுள்ளவை. தலைச்சாயம், நகப்பூச்சுகளின் இராசாயனங்கள் சிறுநீரகங்கள் வரை செறியவும் தாக்கவும் செய்வதாக அண்மையில் அறியப்பட்டிருக்கிறது. மீசைக்கு மையடித்தாற் சிலருக்கு மூச்சுத்திணறல், சொண்டுவீக்கம் என்பன எற்படுவதுண்டு. இது மென் பகுதி என்பதால் உடனே வெளிபடுகிறது. தலை ஓட்டிலுள்ள தசை, தோல் கலங்களிலும் இதன் தாக்கம் இருக்கவே செய்யும். காலப்போக்கில் வெளிப்படும்.

நாற்பதாயிரம் கோடி மயிரில் நாலு மயிர் வெள்ளையானால் மையடிக்கத் தொடங்கிவிடுகிறோமே அப்படியொரு பொய் அழகு அவசியம் தானா? இயற்கையின் அவ்வப்போதைய மாற்றங்களுக்கும் அழகுண்டு, அதுதவிரக் காரணங்களும் உண்டு. இரத்த அழுத்தம் வயதாக அதிகரிக்கும் போது தலையில் கறுப்புமுடிகளைவிட வெண்முடிகளின் பாதுகாப்பு சாதகமானது! மூக்குமயிர் உட்பட அனைத்தும் பலகோடி ஆண்டுகளின் பரிணாமத்தால் உடலுக்குத் அவசியம் தேவையெனக் கண்டு இயற்கையால் சேர்க்கப்பட்டவை. இவற்றில் எதை நீக்கினாலும் பாதிப்புண்டு. எனவே உடலிலிருந்து எதையாவது அகற்றி அழகுபடுத்தல் மரணத்தை விரைவுபடுத்தலுக்கு சமமானது!

கண்மயிர் பிடுங்குதல், முக-மார்பக பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை, அளவுமீறிய எடைக்குறைப்பு இவை இத்தகைய ஆபத்தானவை. மறைந்த சில கலையுலகப் பிரபலங்கள் இதற்கு உதாரணங்கள்.   

புருவமயிர் பிடுங்குதல்-திருத்தல்(Threading) இப்போ அனேகமான இளம் பெண்கள் தினசரி செய்கிறார்கள். இதற்கான இடுக்கிகளை தமது ஒப்பனை((Kosmetik) மடுப்பெட்டியில் போக்கு-வரத்திலும் தம்மோடு எடுத்துத் திரிகிறார்கள். இந்தப் புருவமயிர்கள் தோன்றும் வலயம் உடலிலும் குறிப்பாகக் கண்ணிலும் சக்திக்குரிய வலயம். நாம் சக்தியிழந்து இறப்பை நெருங்கும் போது இவையும் தாமாகக் கொட்டும் நிலைக்கு வந்துவிடுவன. இவை உயிர்ப்புள்ள புருவக்கலங்களின் இணைப்பில் கண்ணைப் பாதுகாத்து சக்தி வழங்குவன! உயிர்ப்போடு தொடர்புடையன!

பொருட்களில் பட்டுத் தெறிக்கும் ஒளிக்கதிர்கள் விழித்திரையில் விழுந்து காட்சியாவது பார்வை என்பது எம் பௌதீக அறிவு. இருந்தும் வெறும் புகைப்படக் கருவிபோலன்றி இதற்கப்பாலும் கண்ணில் காட்சியாகும் பொருட்களை ஒருவகை அதிர்வலைகள் சென்றடைவதாக அறியப்பட்டிருக்கிறது.

•எதிரெதிரா வரும் இரு நபர்களின் இடைவெளி அதிகமிருந்தாலும் ஒருவர் மற்றவரைப் பார்த்தால் அவரும் திரும்பிப்பார்ப்பார். அனேகரிடம் நடப்பது!
•நுண்ணுணர்வின் துணையின்றி எண்ணங்களைச் செயலாக்கும் ரெலிப்பதி (வுநடநியவால) அடிப்படையில் ஒத்தகருத்துள்ள ஒருவரின் கண்மூடியிருக்க அவரது எண்ணம் மற்றவரின் பார்வையில் செயலாவதை பலர் நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள்.
•ஓரிருவர் பார்வையில் பட்ட எடை குறைந்த கண்ணாடிப் பொருட்கள் நடுங்கி விழுந்து நொறுங்கிய செய்திகள் அறிந்தவை . . . . . .
•வெளவால், பூனை, சிலவகை மீன்கள் கண்களிலுள்ள ஒளி விசேடங்கள்!

இந்த வகையில் உடலில் ஓர் அரியவகை உறுப்பு விழி என்பதாலல்லவா அரிய எதையும் கண்போல் என்கிறோம். சிரசில் கண்ணின் சுற்றுவட்டப் பரப்பைச் சூழ காமபூரி, திலர்தம், பொட்டு, மின், நேமம், அடக்கம், பட்சி, கண்ணாடி, பால எனப் யோகிகளால் பெயரிடப்பட்ட வர்மப் புள்ளிகள் இருப்பதாக அண்மையில் வாசித்தறிந்தேன். இவற்றின் வெப்பத் தணிப்புக்காகவும் பாதுகாப்புக்காகவுமே அடர்ந்த புருவமயிர் பிரதேசமுள்ளது. எனச் சொல்லப்படுகிறது. இதுவரை இதை அறிந்திருக்க நமக்கு வாய்ப்பில்லை. ஆனால் அறிந்தபின் அவற்றை அகற்றுவதைக் கைவிட வாய்பிருக்கிறது. மற்றவை பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை மிக அரிதாகவே இடம்பெறுவது. அதுபோல் எடைக் குறைப்பினவசியத்தை இல்லாமலாக்க நேர்-சீரான உணவுப்பழக்கம், உடலுழைப்பு, உடற்பயிற்சிகள் கைகொடுப்பன. அவையே சரியான மார்க்கமுமாகும்.
 
Loading...
  • கட்சியில் தொடர்ந்தும் இருப்பதா இல்லையா; மகிந்த பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்29.12.2015 - Comments Disabled
  • The Parliament Has Left The Building; Let’s Elect Some Fools27.06.2015 - Comments Disabled
  • கிண்ணியாவுக்கு மேலதிக வைத்தியர்களையும் கழிவகற்றும் வாகனங்களையும் வழங்க முதலமைச்சர் பணிப்புரை21.03.2017 - Comments Disabled
  • இலங்கையில் பூரண மதச்சுதந்திரம் அவசியமானது:அத்துல் கசாப்01.11.2015 - Comments Disabled
  • எப்படி வாக்கு அளிக்க வேண்டும் கவனமாகப் படியுங்கள் 16.08.2015 - Comments Disabled