Wednesday, 25 January 2017

ஸ்ரீலங்கா: ராஜபக்ஸ மீண்டும் எழுகிறார்

ஸ்ரீலங்கா: ராஜபக்ஸ மீண்டும் எழுகிறார்

சிறிசேன ஆட்சியின் மயக்கநிலை மிகவும் உயர்வாக இருப்பது ராஜபக்ஸ குலத்தினருக்கு மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் வாய்ப்பாக உள்ளது.

                                         சிங்கராஜ தமித்தா - தெல்கொட

பகுதி - 2


ஐதேக வினால் முன்மொழியப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பு இந்த அச்சங்கள் மற்றும் மனக்கசப்புகளை தீவிரப்படுத்த முனைகிறது. சிவில் சமூக பிரமுகர்கள், மேற்கத்தைய அரசாங்கங்கள், மற்றும்mahinda-1வெளிநாட்டு விமர்சகர்கள் பாராட்டிய போதிலும், ஸ்ரீலங்கா சமூகத்தில்  2000 வருடங்களுக்கு மேலாக மைய இடத்தைப் பெற்றிருந்த பௌத்தத்துக்கு அந்த இடத்தை இல்லாமல் செய்வது அரசாங்கத்தின் நோக்கமாக உள்ளது என்று உச்ச பட்ச சந்தேகத்தைதான்  சிங்களவர்கள் மத்தியில் அது தோற்றுவித்திருக்கிறது.

புது வருடத்தின் மூன்றாவது நாள், பிரதம மந்திரி ரணில் விக்கிரம சிங்காவினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க செயலணி, தனது இறுதி அறிக்கையை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அவர்களின் முன்னிலையில் வைத்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்க அவர்களிடம் கையளித்தது. இந்த செயலணி, உள்நாட்டு யுத்த நிகழ்வுகள் பற்றி விசாரிப்பதற்கும் மற்றும் பொறுப்புக்கூறல், உண்மையை கண்டறிதல், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கல் போன்றவற்றுக்காகவும் 2016ல் அமைக்கப்பட்டது. ஆரம்பத்திலேயே இந்த செயலணியின் தன்மை மற்றும் அமைப்பு என்பன உள்நாட்டில் தீவிர விமர்சனத்துக்கு உள்ளாகியிருந்தன. வெளிநாட்டு நிதியுதவியுடனான தொண்டு நிறுவனம் மற்றும் சிறுபான்மை ஆர்வலர்களின் ஆதிக்கம் காரணமாக இந்த செயலணி ஒரு பக்க சார்பானதாகவும் மற்றும் ஆழமான பிரதிநிதித்துவம் அற்றதாகவும உள்ளதாக கண்டனத்துக்கு உள்ளாகியிருந்தது. இதில் முக்கியமானது பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகிய இருவரும் இந்த இறுதி நிகழ்வில் கலந்து கொள்ளாமலிருப்பதை தெரிவு செய்திருந்தார்கள், ஏனென்றால் அதன் முடிவுகள் ஒரு நேர வெடிகுண்டு துடிப்பதைப் போலிருக்கும். அந்த அறிக்கை வெளிநாட்டு நீதிபதிகள் மற்றும் வழக்குத் தொடுநர்களின் பங்களிப்போடு ஒரு விசேட நீதிமன்றம் மற்றும் விசேட வழக்கு தொடுநர் அலுவலகம் என்பனவற்றுக்கு அழைப்பு விடுக்கிறது.

ஸ்ரீலங்கா இராணுவம் ஒருபோதும் ஒரு வாக்காளர் முகாமாக தோற்றமளித்ததில்லை. அதன் விளைவாக அதுபற்றிய அரசியல் சாத்தியக்கூறுகள் ஒருபோதும் ஆராயப்படவில்லை. யுத்தம் முடிவடைந்த குறுகிய காலத்தில் 2010ல்  சுமார் 160,000 வரையான ஆட்கள்  குறைக்கப்பட்டிருந்த போதிலும், ஸ்ரீலங்கா ஆயுதப்படையில் 200,000 ஆண்கள் செயற்பாட்டு கடமையில் உள்ளார்கள், 20,000 - 40,000 இடைப்பட்டவர்கள் தேவைக்காக இருப்பு நிலையிலும் மற்றும் 18,000 பேர் தேசிய பாதுகாப்பு படையிலும் உள்ளனர், இவர்கள் அனைவரையும் சேர்த்து மொத்தமாக 250,000 படையினர் உள்ளனர். இவர்களுடன் இணைந்து உள்ள குடும்ப அங்கத்தவர்கள், சமூக மற்றும் உறவுமுறை குழுக்கள் என எல்லோரையும் சேர்த்தால் அது நாடு முழுவதிலும் உள்ள ஒவ்வொரு பகுதியையும் சேர்த்து சுமார் ஒரு மில்லியன் வரையான வாக்காளர்களை அது மொத்தமாக திரட்டும். அதிக அளவில் சிங்கள மற்றும் அதிக அளவிலான பௌத்தர்கள், அது உயர்ந்தபட்ச பயிற்சி பெற்ற, கல்வியறிவுள்ள மற்றும் அரசியல் உணர்வுபூர்வமான வாக்காளர்களைக் கொண்ட அமைதியான ஒரு முகாம், சமூகத்தின் ஒவ்வொரு பிரிவுடனும் உறவுகளையும் தொடர்புகளையும் கொண்டவர்கள். சமூகத்திலுள்ள இந்தப் பிரிவினரை வெளிநாட்டு நீதிபதிகள் மற்றும் வழக்குத் தொடுனர்களைக் கொண்டு பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தும் யோசனை தீப்பற்றக்கூடியதும் வெடித்துச் சிதறும் சாத்தியமும் உள்ள ஒன்றாகும். சிறிசேன மற்றும் விக்கிரமசிங்காவுக்கு தேர்தல் ரீதியாக நடைபெறக் காத்திருக்கும் ஒரு பேரழிவு.

அரசியல் ரீதியாக இந்த செயற்பாடுகள் யாவும் ஆழமான எதிர்விளைவுகளை உற்பத்தி செய்யக்கூடியவை. அவற்றால் வாக்குகளை வெல்ல முடியாது, அவை வாக்குகளை இழப்பதற்கே வழி செய்யும். நல்லதுக்கோ அல்லது கெட்டதுக்கோ அரசாங்கத்தின் பிரதம ஓட்டுனரான ஐதேக இந்தப் பழியில் பெரும் பங்கினை பெற்றுக் கொள்ளும். அதன் சர்வதேச பின்துணையாளர்களை மகிழ்ச்சிப்படுத்தவும் மற்றும் நகர மற்றும் சிறுபான்மை வாக்காளர்களை திருப்திப்படுத்தவும் மேற்கொள்ளும் முயற்சியினால் ஐதேக அதன் பாரம்பரிய ஆதரவுத் தளத்தின் பெரும்பகுதியில் இருந்து தனிமைப்பட்டு விடும்.

சிறுபான்மையினரின் முழுமனதான ஆதரவு இருந்தபோதிலும் பெரும்பான்மையினரின் கணிசமான பகுதியினரிடம் இருந்து கிடைத்த ஆதரவுதான் மகிந்த ராஜபக்ஸவின் வீழ்ச்சிக்கும் யகபாலன அரசாங்கத்தின் எழுச்சிக்கும் முக்கியமான காரணி. 2015 ஜனாதிபதி தேர்தல் புள்ளிவிபரங்கள் 40.96 விகிதம் சிங்கள சமூகம் சிறிசேன மற்றும் ஐதேக முகாமுக்கு வாக்களித்ததாக காட்டுகிறது. இந்த விகிதாச்சாரத்தில் நாடு முழுவதிலுமுள்ள தொகுதிகளில் உள்ள மிதக்கும் வாக்காளர்களின் பங்கு மிகவும் முக்கியமானது என்பதை நிரூபிக்கிறது. கடைசி இரண்டு தேர்தல்களிலும் ராஜபக்ஸவின் தொகுதியின் பெரிய பாகங்கள் அவரிடமிருந்து விலகிச் சென்றதை காணக்கூடியதாக இருந்தது, சிலர் வாக்களிக்கவே இல்லை. இதே விஷயம் ஐதேகவுக்கும் நடைபெறக்கூடிய ஆபத்து உள்ளது. மிதக்கும் வாக்குகள் இப்போது உண்மையாகவே திரும்பவும் கடந்து அவரிடமே சென்றுவிட்டதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.

இவை அனைத்துக்கும் மேலாக தொங்கிக் கொண்டிருப்பது, மிகப் பெரும் ஊழலும் மற்றும் கண்கொள்ளாக் காட்சியுமான மத்திய வங்கி பிணை முறி ஊழல், அது அரசாங்கம் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியையும் விடாப்பிடியாய் பின் தள்ளியுள்ளது. நாட்டுக்கு 35 - 45 மில்லியன் ரூபா (233 - 300 மில்லியன் அமெரிக்க டொலர்) பெறுமதியான மிகப் பெரிய நட்டத்தை மட்டுமல்லாது நம்பிக்கை மற்றும் விசுவாசம் என்பனவற்றுக்கு பேரிழப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஒரு ஒற்றை தாக்குதலில் ராஜபக்ஸவுக்கு எதிரான முக்கிய ஆயுதமாக அரசாங்கம் பயன்படுத்திய ஊழல் மற்றும் வெளிப்படைத்தன்மை என்பனவற்றைப் பற்றிய அரசாங்கத்தின் நிலைப்பாட்டை இந்த ஊழல் குறைமதிப்புக்கு உட்படுத்தி நிலைகுலைய வைத்துள்ளது. உண்மையில் விரட்டியடிக்கப்பட்ட முந்தைய அரசாங்கம் மேற்கொண்டதாகக் கூறப்படும் எந்தவொரு நிதிக் குற்றத்திலும் பார்க்க பலமடங்கு இழப்பை இந்த ஊழல் நாட்டிற்கு ஏற்படுத்தியுள்ளது. வெறுமே சேதம் உண்டாக்குவதைப் போல,இதற்கு பொறுப்பான மனிதரான முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அர்ஜூனா மகேந்திரன் பிரதம மந்திரியால் தேர்ந்தெடுக்கப்பட்டவர், கடைசிவரை பிரதமர் அவரைப் பாதுகாத்தார்.

இப்போது சிறிசேன தொடர்ச்சியாக பலவீனமானவராகவும் மற்றும் திறமையற்றவராகவும் காணப்படுகிறார் என்கிற கண்டனத்துக்கு ஆளானபோதிலும், சாதாரண வாக்காளரைப் பொறுத்தமட்டில் அவர் இந்த மண்ணின் மைந்தர் என்கிற உண்மை பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. இதற்கு முரண்பாடாக விக்கிரமசிங்கா பிறந்து, வளர்ந்து, படித்தது எல்லாம் கொழும்பில்தான், சாதாரண ஸ்ரீலங்காவாசியுடன் அவருக்கு போதுமான தொடர்பு இல்லாததால் இந்த உணர்வுகள் அவரை ஒருபோதும் அசைத்துவிடாது. இது அவரை மேலும் மேலும் குற்றச்சாட்டுகளுக்கு உட்படும் பலவீனமானவராக ஆக்கிவிட்டது, தனது இதயத்தில் தேசிய நலனுக்கான அக்கறை இல்லாத மனிதனராக வெளிநாட்டு நலன்களுக்காக ஆட்டிவிக்கப்படும் பகடைக்காயாக அவர் மாறியுள்ளார்.

இந்தக் கருத்து இந்தியாவுடன் விசேடமாக தென் இந்தியாவுடன் ஒரு பொருளாதார ஒன்றியத்தை அமைக்கும் அவரது திட்டத்துக்கு உதவி செய்யாது. ஒக்ரோபர் 2016ல், சிலோன் பிஸ்கட் நிறுவனத்தின் முன்னாள் தலைவரான மினேகா விக்கிரமசிங்க, இந்தியாவுடனான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கை (எட்கா) யில் உள்ள ஆபத்து பற்றி எச்சரிக்கை செய்திருந்தார். இந்தியாவில் உற்பத்தி வியாபாரம் செய்வதற்காக அனுமதிக்கப்பட்ட ஸ்ரீலங்கா நிறுவனங்களில் முதலாவது நிறுவனமான சிலோன் பிஸ்கட் நிறுவனம், அது எதிர்கொண்ட மறைமுகமான வரிகள், சுங்க வரி தடைகள், மறறும் நிருவாக எதிர்ப்புகள் காரணமாக இந்தியாவில் தனது செயற்பாட்டை நிறுத்தவேண்டி ஏற்பட்டது.

"அவர்களால் எங்களின் தரமான பொருட்களை வாங்க முடியாது…இதன்படி அங்கு பாரிய வர்த்தக ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும்" என விக்கிரமசிங்க சொன்னார். "இன்று இந்தியாவுக்கு சரியாக என்ன வேண்டுமோ அதைத்தான் அரசாங்கம் செய்கிறது. அரசாங்கத்தை வலது பக்கம் திரும்பும்படி இந்தியா கேட்டால் அரசாங்கம் அதன்படியே நடக்கும்…. அரசாங்கம் தனது மக்களுக்கு விசுவாசமாக இருக்கவேண்டும், வெளிநாட்டவர்களுக்கல்ல".

ஒரு முன்னோடி தொழிலதிபர் மற்றும் ஸ்ரீலங்கா வர்த்தக வட்டாரத்தில் மிகவும் உயர்வாக மதிக்கப்படும் மனிதரான விக்கிரமசிங்காவின் கருத்து ஆழ்ந்த அமைதியற்ற தன்மையை பிரதிபலிக்கிறது. வர்த்தக சமூகத்தின் தூண்களைப் போன்றவர்கள், தற்போதைய அரசாங்கத்தின் மீதுள்ள தங்கள் அதிருப்தியை இப்போது முற்றிலும் வெளிப்படையாகவே காட்டி வருகிறார்கள். இயக்கம் மற்றும் உறுதிப்பாடு குறைவுகளுடன் இணைந்த விநியோகத்தின் முடக்கமான தோல்வி, திறமையின்மை காரணமாக அதையும் விட அதிகம் தடைப்படும் கருத்துக்கள் என அரசாங்கத்தின் குறைபாட்டுக்கான பல காரணிகளை அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

ராஜபக்ஸ அராங்கத்தின் கடைசி மூன்று வருடங்களில் பொருளாதார வளர்ச்சி 7 - 8.5 வரையான வீச்சில் மிகவும் உயர்வாக இருந்தது. அதிலிருந்து தாக்கம் பெரும்பாலும் கீழ் நோக்கியதாகவே போகிறது, 2017ல் ஆகச் சிறந்ததாக ஸ்ரீலங்கா நம்பக்கூடியது கிட்டத்தட்ட 4.5 விகிதம்தான். முந்தைய அரசாங்கத்தால் பெறப்பட்ட மிகப்பெரும் கடன்சுமையை சமாளிக்க நாடு போராடுவதுடன், டொலருக்கு எதிரான ரூபாயின் பெறுமதியை மதிப்பிறக்கம் செய்யும்படி அழுத்தங்களும் பெருகி வருகின்றன. போதுமானளவு அந்நியச் செலவாணி கையிருப்பு இல்லாமல், ருபாயின் மிகப் பெரிய மதிப்பிறக்கத்தை ஸ்ரீலங்காவால் தவிர்க்க இயலாது, தற்போது ஓடிக்கொண்டிருக்கும் பணவீக்கமும் தொடரும். இந்த காரணிகள் மற்ற அனைத்துடனும் ஒன்று சேர்ந்து தற்போதைய அரசியல் நிலவரத்தின் ஆழமான அதிருப்தி நிலைக்கு மேலும் எரியூட்டலாம்.
கீழே குறிபிடும் காரணங்கள் வெகு தெளிவாக உள்ளன: சிறிசேன - விக்கிரமசிங்க நிருவாகம் உள்நாட்டில் அதற்குச சாதகமான ஆனுகூலுங்களை இயக்க முடியாது. பிரவாகம் போன்ற  குற்றச்சாட்டுகள், விசாரணைகள், ஆராய்ச்சிகள் மற்றும் கைதுகள் என்பனவற்றால் சேதமடைந்து செல்வாக்கிழந்த ஆட்சியினரை உயிர்த்தெழுப்புவதன் மூலம் அவர்களுக்கு அனுதாபத்தை தேடிக் கொடுப்பதில்  மட்டுமே வெற்றி பெறமுடியும்.

எல்லா குறைகளுக்கும் அப்பால் கடந்த இரண்டு வருடங்களாக மகிந்த ராஜபக்ஸவின் மீதான ஈர்ப்பு மற்றும் அரசியல் முறையீடு என்பன தொடர்ந்து வளர்ந்து வருகின்றன. எனினும் தற்போதைய அரசியலமைப்பின் கீழ் அவர் மீண்டும் ஜனாதிபதியாக முடியாது. அத்துடன் அவரது மரபுரிமை தோல்விகளால் மங்கிப்போய்விட்டது.

இந்தச் சமன்பாட்டில் அமைதியாக உள்ள முன்னாள் ஜனாதிபதியின் சகோதரர் கோட்டபாய ராஜபக்ஸ முன்னுக்கு வருகிறார். அவரது முக நூல் பக்கங்கள், புதிய நம்பிக்கைகள் உதயமாவதற்கும் எதிர்காலத்தை பார்ப்பதற்கும் தகுதியாக உள்ளதுடன் ஒரு புதிய விடியலைப் பற்றிய குறிப்பையும் அது தெரிவிக்கிறது. பொதுமக்களின் மனங்களை ஒரு பலம் வாய்ந்த அரசியல் சக்தியாக கோட்டபாய ராஜபக்ஸ, தனது சாதனைகள் மற்றும் செயல்களாலும் பிரதிநிதித்துவப் படுத்துகிறார், "தான் செய்யப்போவதாகச் சொல்வதை செய்யக்கூடிய " ஒரு மனிதர், திரும்பவும் டி சில்வாவின் வார்த்தைகளின் பொழிப்புரை.
ஸ்ரீலங்காவின் இதயப்பகுதியில் மக்கள் ஒரு மாற்றத்துக்காக காத்திருக்கிறார்கள். 2014ன் முடிவில் ராஜபக்ஸக்கள் ஒரு கடந்த காலம். இப்போது அவர்கள்தான் எதிர்காலமாக இருக்க முடியும்.

(ஒரு வரலாற்று ஆசிரியரும் மற்றும் கல்வியாளருமான கலாநிதி. சிங்கராஜ தமித்த - தெல்கொடவுக்கு, ஸ்ரீலங்காவின் கலை மற்றும் கலாச்சாரத்தின் மீது ஒரு அதிகாரம் உள்ளது. இறுதிக்கட்ட  ஈழ போரின் போது யுத்தவலயத்துக்குள் அனுமதிக்கப்பட்ட  போரில் ஈடுபடாத ஒரு சிலரில் இவரும் ஒருவர். அவரது வேலைகள் தேசிய மற்றும் சர்வதேச பத்திரிகைகள் மற்றும் இராணுவ இதழ்களில் பிரசுரமாகியுள்ளன. இவர் ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா கனடா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் விரிவுரைகள் நடத்தியுள்ளார்.)

 மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்

Loading...
  • கனடாவில் இருந்து 140000 பேர் நாடுகடத்தப்படும் அச்சுறுத்தல்!!!13.06.2015 - Comments Disabled
  • Sri Lankan Airlines: Charitha Ratwatte’s Brother Appointed As New CEO11.09.2015 - Comments Disabled
  • சுமந்திரனுடன் எம். பி உடன் தர்க்கம், அவுஸ்ரேலியச் சந்திப்பில் பரபரப்பு09.11.2015 - Comments Disabled
  • கிழக்கு முஸ்லிம்கள் தன்மானம் உள்ளவர்கள் என்பதை நிரூபிக்க நீங்கள் புறப் பட வேண்டும்.16.03.2017 - Comments Disabled
  • Social Market Economy: Does It Provide A Solution For Sri Lanka?04.08.2015 - Comments Disabled