Friday, 28 September 2018

ஆங் சான் சூச்சியின் கௌரவ குடியுரிமையை மீளப் பெறுகிறது கனடா

மியான்மர் தலைவர் ஆங் சான் சூச்சிக்கு வழங்கப்பட்ட கௌரவ குடியுரிமையைத் திரும்பப்பெற கனடிய பாராளுமன்றத்தில் (ஹவுஸ் ஆஃப் காமன்ஸ்) ஏகமானதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.

மேலும் ரோஹிஞ்சா முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த வன்முறைகளை இனப்படுகொலையாக அங்கீகரிக்கும் தீர்மானத்தையும் ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் ஏகமானதாக நிறைவேற்றியுள்ளது.

கடந்த ஓராண்டு காலமாக மியன்மரில் நடக்கும் வன்முறைச் சம்பவங்களால் இதுவரை சுமார் ஏழு லட்சம் ரோஹிஞ்சா முஸ்லிம்கள் மியன்மரை விட்டு வெளியேறியுள்ளனர் என்பதால் சூச்சி இன்னும் கௌரவ குடியுரிமைக்குத் தகுதியானவராக உள்ளாரா என கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கேள்வி எழுப்பிய நிலையில் மறுநாள் ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் அவையினால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

புத்த மதத்தினர் பெரும்பான்மையாக வாழும் மியான்மரில், நாடற்ற ரோஹிஞ்சா இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறைகள் சூச்சிக்கு வழங்கப்பட்டுள்ள கௌரவ குடியுரிமையை ரத்து செய்வதால் நிற்கப்போவதில்லை என்றும் ட்ரூடோ குறிப்பிட்டுள்ளார்.

ராணுவ ஆட்சியின் கீழ் இருந்த, பர்மா என்று அழைக்கப்பட்ட மியான்மாரில் மக்களாட்சியை நிறுவ மேற்கொண்ட முயற்சிகளுக்காக ஆங் சான் சூச்சிக்கு 1991இல் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

இதனையடுத்து கடந்த 2007ம் ஆண்டு ஆங் சான் சூச்சிக்கும் கனடா அரசாங்கத்தினால் கௌரவ குடியுரிமை வழங்கப்பட்டது.

ரோஹிஞ்சா இன மக்களுக்கு எதிராக நடந்த இனப்படுகொலைகள் தொடர்பாக மியான்மர் ராணுவ அதிகாரிகளை விசாரணை செய்ய வேண்டும் என்று ஐ.நா கடந்த மாதம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் வலியுறுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Loading...
  • வாக்குறுதி அளித்து ஏமாற்றி விட்டனர்! அதிர்ச்சியில் கருணா!15.07.2015 - Comments Disabled
  • கட்டுப் பணம் செலுத்தியுள்ள தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி07.07.2015 - Comments Disabled
  • துணிவே தொழில்: வெற்றியை நிர்ணயிப்பது எது?06.05.2015 - Comments Disabled
  • மட்டு. வைத்தியசாலையில் கடந்த 4 ஆண்டுகளில் 52,349 குழந்தைகள் பிறப்பு29.11.2015 - Comments Disabled
  • வயதானால் இன்பம் குறையுமா?09.05.2015 - Comments Disabled