Friday, 28 September 2018

முச்சக்கர வண்டிகளுக்கு மீட்டர் பொருத்துவது அடுத்த மாதம் முதல் அமுலில்

பயணிகள் முச்சக்கர வண்டிகளுக்குக் கட்டண அறவீட்டு மீட்டர் பொருத்துவது அடுத்த மாதம் முதல் கட்டாய நடைமுறைக்குக் கொண்டு வர தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வீதிப் பாதுகாப்பு சம்பந்தமான தேசிய சபை தெரிவித்துள்ளது.

குறித்த சட்டம் அடுத்த மாதம் இரண்டாம் வாரம் முதல் அமுலுக்குக் கொண்டு வரப்படும் என வீதிப் பாதுகாப்பு சம்பந்தமான தேசிய சபையின் தலைவர் சிசிர கோதாகொட தெரிவித்தார்.

மீட்டர் பொருத்துவதற்காக சாரதிகளுக்கு நீண்ட காலம் அவகாசம் வழங்கப்பட்டதாகவும், வழங்கப்பட்டிருந்த சலுகைக் காலத்தை மேலும் நீடிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த சட்டத்தை மீறும் முச்சக்கர வண்டி சாரதிகளை கைது செய்வதற்கு அல்லது அபராதம் விதிப்பதற்கு பொலிஸாருக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருப்பதாக வீதிப் பாதுகாப்பு சம்பந்தமான தேசிய சபையின் தலைவர் சிசிர கோதாகொட மேலும் தெரிவித்தார்.

அத்துடன் முச்சக்கர வண்டிகளுக்குக் கட்டண அறவீட்டு மீட்டர் பொருத்துவது தவிர பயணிகளுக்கு பற்றுச்சீட்டு வழங்கும் சட்டமும் நடைமுறைக்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Loading...
  • Pilot Ranil Wickramasinghe Diverts Mihin Lanka’s Seychelles Flight To Madagascar12.04.2016 - Comments Disabled
  • இலங்கை திரும்பிய 56 பணிப்பெண்கள்28.08.2015 - Comments Disabled
  • நெருங்கி வரும் ஐ.நா கூட்டத் தொடர்! s23.08.2015 - Comments Disabled
  • Final Decision On 20th Amendment Bill On Friday11.06.2015 - Comments Disabled
  • MILKING AN OPPORTUNITY04.06.2015 - Comments Disabled