Thursday, 4 October 2018

கம்உதாவ வேலைத்திட்டத்தின் 132 மற்றும் 133வது கிராமம் நாளை மக்களிடம் கையளிப்பு


முல்லைத்தீவு மாவட்டத்தில் மாந்தை கிழக்கில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பண்டாரவன்னியன் மாதிரிக்கிராமமும் கைலாயவன்னியன் மாதிரிகிராமமும் மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது.

இந்த நிகழ்வானது நாளை காலை 8மணிக்கு முல்லைத்தீவு மாந்தை கிழக்கில் இடம்பெறவுள்ளது.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுள்ள 132 மற்றும் 133 வது கிராமங்கள் இதுவாகும்.

இதில் 55 வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. நீர் மற்றும் மின்சார வசதிகள், உள்ளகப் பாதை வசதிகள், பிரவேசப் பாதை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளதுடன், வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை பிரதி அமைச்சர் இந்திக்க பண்டாரநாயக்கவும் கலந்துகொள்ளவுள்ளார். 
Loading...