பாராளுமன்றத்தில் அடுத்த மாதம் 5ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ள,2019ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட யோசனைக்கு பொது மக்களின்அபிப்ராயங்களைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை மக்களின் வரவு செலவுத்திட்டமாக மாற்றும் எதிர்பார்ப்புடன், பொதுமக்களின் அபிப்ராயத்தை பெறும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
‘வலுமிக்க கொருளாதாரம், வளமிக்க நாடு என்ற’ என்ற தொனிப்பொருளின் கீழ் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவால் அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்ட யோசனை நவம்பர் மாதம் 5ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையிலேயே, நிதி அமைச்சு இந்தத் தகவலை தெரிவித்துள்ளது.
தொழில் வல்லுனர்கள், உற்பத்தியாளர்கள், விவசாயத்துறையில் ஈடுபடுபவர்கள், தனிநபர்கள், பொதுமக்கள் என அனைவரும் தமது அபிப்ராயங்களை தெரிவிக்க முடியுமெனத் தெரிவிக்கப்படுகிறது.
வரவு செலவுத்திட்டம் தொடர்பான அபிப்ராயங்களை ஒக்டோபர் மாதம் 12ஆம் திகதிக்கு முன்னர் பணிப்பாளர் நாயகம், வர்த்தகம் மற்றும் முதலீட்டு கொள்கைகள் திணைக்களம், நிதியமைச்சு, பொதுசெயலாளர் அலுவலகம், கொழும்பு- 01 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிகத் தகவல்களை Prasangika.hg@tipd.treasury.gov.lk என்ற இணையத்தளத்தில் பார்வையிடலாமெனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.