Friday, 5 October 2018

யாருடைய கணக்கில் 15 கோடி பணம்- மத்திய வங்கியிடம் மஹிந்த விளக்கம்

அமைச்சர் ஒருவரின் வங்கிக் கணக்கில் 1500 லட்சம் ரூபா வைப்பிலிடப்பட்டுள்ளதாக தகவல் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், அந்த அமைச்சர் யார் என்பதை அரசாங்கம் நாட்டுக்குத் தெரியப்படுத்த வேண்டும் எனவும் கூட்டு எதிர்க் கட்சி அறிவித்துள்ளது.

கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க நேற்று (04) இதனைக் கூறியுள்ளார்.

இதேவேளை, இந்தக் கருத்து தொடர்பில் ஸ்ரீ ல.சு.க.யின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அமைச்சர் மஹிந்த சமரசிங்கவிடம் வினவிய போது,

இந்த சம்பவத்துக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லையெனவும், சம்பந்தப்பட்ட நபர் யார் என்ற தகவலை இலங்கை மத்திய வங்கி நாட்டுக்கு வெளியிட வேண்டும் எனவும் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
Loading...