Tuesday, 2 October 2018

சகல வசதிகளுடனும் கூடிய 500 விளையாட்டு மத்திய நிலையங்கள் நாடுமுழுவதும் – பிரதமர்

அனைத்து வசதிகளுடனும் கூடிய 500 விளையாட்டு மத்திய நிலையங்கள் நாடு முழுவதும் தெரிவு செய்யப்பட்ட 500 பாடசாலைகளில் நிர்மாணிப்பதாகப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அனைத்து மாவட்டங்களுக்கும் கிடைக்கும் வகையில் அடுத்த மூன்று வருடங்களில் இந்த விளையாட்டு மத்திய நிலையங்கள் ஆரம்பிக்கப்படும் எனவும் அருகிலுள்ள பாடசாலைகளுக்கும் குறித்த நிலையத்துக்கு சென்று பயிற்சிகளைப் பெறமுடியும் எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.

34வது பாடசாலை விளையாட்டு விழாவின் ஆரம்ப வைபவம் நேற்று (01) கொழும்பு சுகததாஸ மைதானத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச வீரர்களை உருவாக்கும் முதல் கட்டமாக இந்த விளையாட்டு மத்திய நிலையங்கள் ஆரம்பிக்கப்படும் எனவும் பாடசாலையிலிருந்து சர்வதேசம் வரை செல்லக்கூடிய வழியை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும் பிரதமர் இதன்போது மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...