Friday, 5 October 2018

பேருவளை துப்பாக்கிச் சூடு: 9 பேர் கைது

பேருவளைப் பிரதேசத்தில்  நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் ஒரு பெண் உள்ளிட்ட 09 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் கழுத்துறை பிரிவின் போதைப் பொருள் பிரிவு அதிகாரிகள் மற்றும் பொலிஸ் நிலைய அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது சந்தேக நபர்களைக் கைதுசெய்ய முடிந்ததாகவும்  பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த, முங்ஹேன, வலத்தற பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயது இளைஞர், களுத்துறை நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கைது செய்யப்பட்ட  சந்தேகநபர்களிடமிருந்து துப்பாக்கிச் சூட்டிற்குப் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் ரி.56 ரக துப்பாக்கி ஒன்று, 27 தோட்டாக்கள் அடங்கிய மெகசின், மூன்று கத்திகள்,  கார்  ஒன்று என்பன கைப்பற்றப்பட்டதோடு, கொள்ளையிடப்பட்ட  மோட்டார் சைக்கிள் ஒன்றும்  பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 
Loading...