வில்பத்து காட்டை அழித்தவர்கள் அமைச்சுப் பதவிகளை வகிப்பதாகவும், அதனை வெளிப்படுத்தியவர்கள் நீதிமன்றம் நீதிமன்றமாக அலைந்து திரிவதாகவும் பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
உண்மையை வெளிப்படுத்தியவர்களுக்கு இலங்கையில் இதுதான் ஏற்படும் நிலை எனவும் தேரர் மேலும் சுட்டிக்காட்டினார்.
வழக்கொன்றுக்காக இன்று நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு மீண்டும் சிறைச்சாலைக்குச் செல்லும் போது ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் கூறினார்.
இந்த வழக்கு மீண்டும் எதிர்வரும் டிசம்பர் 13 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனவும் கோட்டே நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரத்ன இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.