Thursday, 4 October 2018

புதிய களனி பாலம் திருத்தப்பணி – மாற்று வழிகளை உபயோகிக்குமாறு வேண்டுகோள்

பேலியகொட சுற்றுவட்டத்திலிருந்து, கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதிக்கு உள்நுழையும் பகுதியானது, புதிய களனி பாலத்துக்கானத் திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளமையின் காரணமாக, இன்றிலிருந்து (04) எதிர்வரும் 20 ஆம் வரை தற்காலிகமாக மூடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் சாரதிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களைத் தடுத்துகொள்வதற்காக மாற்று வழிகளை உபயோகிக்குமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.
Loading...