Wednesday, 3 October 2018

தேசிய தகவல் தொழில்நுட்ப மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்

உள்நாட்டு, வெளிநாட்டு தகவல் தொழில்நுட்ப நிபுணர்களின் அறிவை தொழில் வல்லுனர்களிடம் கொண்டு செல்லும் நோக்குடன் இலங்கை கணனி சங்கத்தினால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் “தேசிய தகவல் தொழில்நுட்ப மாநாடு 2018” அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நேற்று (02) பிற்பகல் கொழும்பில்இடம்பெற்றது.

இலங்கை கணனி சங்கத்தினால் 36வது தடவையாக இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், நாட்டின் தகவல் தொழில்நுட்ப வல்லுனர்களின் அறிவை மேம்படுத்துவதும் அவர்களுக்கு மத்தியில் நவீன அறிவுப் பகிர்வை மேற்கொள்வதும் இதன்மூலம் எதிர்பார்க்கப்படும் நோக்கமாகும்.

உள்நாட்டு, வெளிநாட்டு தகவல் தொழில்நுட்ப நிபுணர்களுக்கு மத்தியிலான தொடர்புகளை மேம்படுத்துதல் மற்றும் சர்வதேச தொழில் வல்லுனர்கள் தகவல் தொழில்நுட்பத் துறையுடனான தொடர்புகளை மேலும் பலப்படுத்துவதற்கும் இதன்மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது.

இவ்வருடம் கணனி துறையில் வளர்ந்துவரும் மற்றும் சிறந்த கணனி வல்லுனர்கள் 08 பேருக்கு ஜனாதிபதி அவர்களினால் பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டன.

அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
Loading...