Wednesday, 3 October 2018

பழைய முறையில் தேர்தலை நடத்த பலரும் இணக்கம்

பல்வேறு தரப்பினர் பழைய முறையில் தேர்தலை நடத்துவதற்கு தங்களது விருப்பத்தை தெரிவித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் மரிக்கார் தெரிவித்துள்ளார்.

பழைய தேர்தல் முறை ஊழல் நிறைந்ததாக இருப்பினும் பல்வேறு தரப்பினரும் அம்முறையினை விருப்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இரத்மலானை பகுதியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை எம்முறையிலேனும் அவசரமாக தேர்தலை நடத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொகுகே கொழும்பில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
Loading...