பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவத்தினை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்க வேண்டும். இதனால் பாராளுமன்ற உறுப்புரிமையை இரத்து செய்ய முடியாது. அவ்வாறானதொரு சட்ட சிக்கல் ஏற்படுமாயின் அதனை எதிர்கொள்ளத் தயார் என பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் தெரிவித்தார்.
தலைமைத்துவ பதவியினை மஹிந்த ஏற்க வேண்டும் என்பதே கட்சியின் பெரும்பான்மையான உறுப்பினர்களின் விருப்பமாகவும், நாட்டு மக்களின் எதிர்ப்பாகவும் காணப்படுகின்றது .
ஆகவே இவ்விடயத்தில் மக்களின் விருப்பத்தினை அவர் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை காணப்படுகின்றது.
பத்தரமுல்ல- நெலும் மாவத்தையில் அமைந்துள்ள பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று திங்கட்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
(இராஜதுரை ஹஷான்)