நூற்றுக்கணக்கான மனித உயிர்களை பலிகொண்டதுடன், பாரிய பொருட்சேதத்தையும் ஏற்படுத்தியுள்ள கடந்த 28ஆம் திகதி இந்தோனேஷியாவின் மத்திய சுலாவெசி டெங்கா பிரதேசத்தில் ஏற்பட்ட திடீர் சுனாமி அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சகல இந்தோனேஷிய மக்களுக்கும் அந்நாட்டு அரசாங்கத்திற்கும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார்.
இந்தோனேஷிய ஜனாதிபதி ஜொகோ விடொடோவிற்கு ஜனாதிபதி அனுப்பிவைத்துள்ள இரங்கல் செய்தியில் இந்த அனர்த்தத்தினை கேள்வியுற்று தாம் அதிர்ச்சிக்கு உள்ளாகியதாக குறிப்பிட்டுள்ளார்.
அனர்த்தத்திற்கு உள்ளாகியுள்ள சகல மக்களுக்கும் இலங்கை அரசினதும் மக்களினதும் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதாகவும் ஜனாதிபதி தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த இக்கட்டான சூழலில் இந்தோனேஷியாவுடன் இலங்கையும் கைகோர்த்துள்ளதாகவும் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தத்திலிருந்து மீண்டும் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான ஆற்றல் இந்தோனேஷிய ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் கிடைக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி தனது இரங்கல் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.