இந்தோனேஷியாவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்தோனேசியாவின் சுலேவேசி தீவில் கடந்த வெள்ளிக்கிழமையன்று 7.5 ரிக்டர் அளவில் நிலடுக்கமும், 170 முறை அதிர்வுகளும் ஏற்பட்டதையடுத்து பலு, டோங்கலா பகுதிகைளை சுனாமி தாக்கியது.
இந்த நிலடுக்கம் மற்றும் சுனாமி தாக்கம் காரணமாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்த அந் நாட்டு அரசாங்கம் உயிரிழந்தோரின் முழுமையான தொகையினை முழுமையாக அறிவிக்கவில்லை.
அத்துடன் இதனால் பல கோடி மதிப்பிலான சொத்துகளுக்கும் பாரிய சேதம் ஏற்பட்டதுடன் மீட்பு படையினர் உயிரிழந்தோரை மீட்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந் நிலையில் இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் உள்ள சும்பா எனும் தீவிலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் 5.9 ரிக்டர் அளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
எனினும் சுமார் 7 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வரும் அந்த தீவில் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.