உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கையின் கலாசார பாரம்பரியம் மற்றும் வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள் தொடர்பிலானத் தகவல்களை இலகுவாக தெரிந்துக்கொள்வதற்கு புதிய செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
சுற்றுலாத் தளங்களைப் பார்வையிடுவதற்கும் இணையத்தளம் ஊடாக, அனுமதிச் சீட்டுகளை பெற்றுக்கொள்ளவும் கூடியதுமான, அலைபேசி செயலி ஒன்றையே அறிமுகப்படுத்த இலங்கை தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப நிறுவனம் (ICTA) மற்றும் மத்திய கலாசார நிதியம் என்பன நடவடிக்கை எடுத்துள்ளன.
சுற்றுலாப் பயணிகள் சுற்றலா வழிகாட்டுபவர்களின் உதவியின்றி தொல்பொருள் இடங்கள், அது தொடர்பான வரலாற்றுத் தகவல்களை இதனூடாகப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும், இவற்றை பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் பகிரும் வசதிகளும் செய்துக்கொடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகிலுள்ள 16 இற்கும் மேற்பட்ட மொழிகளில் இந்த செயலி ஊடாக தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதுடன், QR என்ற குறியீடு ஊடாக குரல் பதிவுகள் மூலமும் தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.