Wednesday, 3 October 2018

பொன்சேகா சொன்னதையே நானும் சொல்கின்றேன்

வடக்கு, கிழக்கில் யுத்தத்தை எவ்வாறு முடிவு செய்தோம் என்பதற்கு முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகா கூறிய அதே கருத்தைத் தான் தானும் கூறவேண்டியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.

அன்று யுத்தத்தை முடிவு செய்தது யார்? எவ்வாறு? என்பதை இந்நாட்டிலுள்ள சிறிய பிள்ளைகள் கூட நன்கு அறிந்துள்ளனர். யுத்தத்தை முடிவு செய்தது எவ்வாறு என்பதற்கு யாரும் புதிதாக விளக்கம் கூற வேண்டியதில்லையெனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி நிவ்யோர்க்கிலுள்ள இலங்கையர்களிடத்தில் இறுதி யுத்தம் தொடர்பாக தெரிவித்திருந்த தகவல்களுக்கு அமைச்சர் சரத் பொன்சேகா எதிராக பதிலளித்திருந்தார். இது குறித்து மஹிந்த ராஜபக்ஷவிடம் வினவியதற்கே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
Loading...