ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த வாரம் கலந்துரையாடிய விடயங்கள் தொடர்பில் கூட்டு எதிர்க் கட்சிக்கு அறிவிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நாளை (09) கூட்டு எதிர்க் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டமொன்று இடம்பெறவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் மீண்டும் குறிப்பிட்டுள்ளன.
இரு தலைவர்களுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை குறித்து இக்கூட்டத்தில் விரிவாக கலந்துரையாடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கூட்டணி அரசாங்கம் ஒன்று அமைப்பது தொடர்பில் இதன் போது கூடுதல் கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் நேற்றைய தினம் நீர்கொழும்பில் இடம்பெற்ற அரசியல்வாதியொருவரின் மகளின் திருமண வீட்டில் சந்தித்துக் கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இருப்பினும், தான் ஜனாதிபதியை கடந்த ஞாயிற்றுக்கிழமை சந்திக்கவில்லையென மஹிந்த ராஜபக்ஷ நேற்று ஊடகங்களிடம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.