Saturday, 6 October 2018

ஸ்ரீ லங்கன் விமான சேவை உலகில் சிறந்த விமான சேவையாக தெரிவு

கடந்த செப்டம்பர் மாதத்தில் உரிய நேரத்துக்கு அதிகமான விமான சேவைகளை முன்னெடுத்த சிறந்த விமான சேவை நிறுவனமாக ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

flightstats.com நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதத்தில் மாத்திரம் 91.37 வீதமான பயணங்களை உரிய நேரத்துக்கு செலுத்தியுள்ளதாக பதிவாகியுள்ளது.

ஐரோப்பா, அமெரிக்கா, ஆசியா, மத்திய கிழக்கு போன்ற உலகிலுள்ள முக்கியமான சிறந்த விமான சேவை நிறுவனங்கள் இந்த ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. அமெரிக்காவின் விமான சேவை நிறுவனமான டெல்டா விமான சேவை நிறுவனம் இந்த ஆய்வின்படி இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. ஜப்பான் விமான சேவை நிறுவனமான ஏ.எல்.ஏ. விமான சேவை நிறுவனம் 3 ஆம் இடத்துக்கு தெரிவாகியுள்ளது. 
Loading...