பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவத்தினை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறுகிய நோக்கங்களை மையப்படுத்தி பொறுப்பேற்றால் அவருக்கு எதிராக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி நடவடிக்கைகளை மேற்கொள்ளும். ஏனெனில் அவர் இன்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினராகவும், ஆலோசகராகவும் காணப்படுகின்றார் என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்தார்.
எவ்வாறு இருப்பினும் மஹிந்த ராஜபக்ஷ ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் உறுப்புரிமையினை ஒருபோதும் துறக்கமாட்டார். ஏனெனில் அவரது அரசியல் பயணம் இக்கட்சியில் இருந்தே ஆரம்பிக்கப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
சிலவேளை எவரும் எதிர்பாராத வகையில் பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவத்தினை மஹிந்த பொறுப்பேற்றால் பாரிய எதிர்விளைவுகளை சந்திக்க நேரிடும்.இவ்விடயம் கட்சி ரீதியில் பல தீர்க்கமான தீர்மானங்கள் எடுக்கப்படும்.
இதன் காரணமாக அவரது தரப்பினரும் பல சவால்களை எதிர்கொள்ள நேரிடும். கூட்டிணைந்த எதிர் கட்சியினர் இதுபோன்ற பல விடயங்களை கடந்த காலங்களில் தொடர்ச்சியாக குறிப்பிட்டுள்ளனர். ஆகவே இவ்விடயத்தையும் பெரிதுப்படுத்திக் கொள்ள முடியாது.
(இராஜதுரை ஹஷான்)