கடும் வறட்சி காலநிலை காரணமாக உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபட முடியாததனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்தும் நிவாரணத்தை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்கமைவாக வறட்சி காலநிலையின் காரணமாக தொடர்ச்சியாக மூன்று போகங்களில் உற்பத்தியை மேற்கொள்ள ழுடியபாமல் போன நெல் மற்றும் ஊடு உற்பத்தி மேற்கொள் முடியாத விவசாய குடும்பங்கள், வறட்சிகால நிலை காரணமாக தமது வாழ்வாதார வழிகளை இழந்த மற்றும் நன்னீர் கடற்றொழில் துறையில் ஈடுபட்டுள்ள குடும்பங்கள், விவசாய தொழிலாளர்கள் உள்ளடங்கலாக 4 இலட்சத்து 51 ஆயிரத்து 224 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சமர்ப்பிதத ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.