வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்கள் தமது பணத்தை வங்கிக்கூடாக அனுப்புவதை ஊக்குவிக்கும் வகையில் விசேட திட்டமொன்று வரவு செலவுத் திட்டத்தில் உள்வாங்கப்பட்டிருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்தார்.
சிறிகொத்தவில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
வங்கிகளுக்கூடாக அனுப்பும் பணத்துக்கு மாற்றீடாக அவர்களுக்கு உள்நாட்டில் வீடு அமைப்பது உள்ளிட்ட பல முக்கிய வசதிகளை வங்கிகள் செய்து கொடுக்கும் வகையில் இவ்விசேட திட்டம் வடிவமைக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, எச்சந்தர்ப்பத்திலும் எந்தவொரு காரணத்துக்காகவும் வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் அனுப்பும் பணத்துக்கு வரி அறவிடப்பட மாட்டாதென்றும் அமைச்சர் இதன்போது தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.