Thursday, 11 October 2018

சூத்திரத்துக்கு அமைய எரிபொருள் விலை அதிகரிப்பு

நல்லாட்சி அரசாங்கம் அறிமுகம் செய்துள்ள எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கு அமைய நேற்று (10) நள்ளிரவு முதல் எரிபொருள்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் ஒரு லீட்டரின் விலை ரூபா 6 இனாலும், ஒக்டேன் 95 ரக பெற்றோல் ஒரு லீட்டரின் விலை ரூபா 8 இனாலும், சுப்பர் டீசல் ஒரு லீட்டரின் விலை ரூபா 8 இனாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. சாதாரண (Auto) டீசலின் விலையில் மாற்றமில்லை எனவும் நிதியமைச்சு அறிவித்துள்ளது.

இந்த விலை ஏற்றத்துடன், ஒக்டைன் 92 ரக பெற்றோல் ரூபா 149 இலிருந்து 155 ரூபாவாகவும், ஒக்டைன் 95 ரக பெற்றோல் ரூபா 161 இலிருந்து 169 ரூபாவாகவும், சுப்பர் டீசல் ரூபா 133 இலிருந்து  141 ரூபாவாகவும்  அதிகரிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விலைச்சூத்திரத்திற்கு அமைய எரிபொருட்களின் விலை ஒவ்வொரு மாதத்தினதும் 10 ஆம் திகதி திருத்தம் செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Loading...
  • கொழும்பு மாவட்டத்தில் மழைக்கான காலநிலை தொடரும்01.10.2015 - Comments Disabled
  • மோசடியாளர்களை பாதுகாக்கும் அரசு05.11.2015 - Comments Disabled
  • தைரியமும் ஆளுமையும் நிறைந்த ஒரே தவைவன் ஹக்கீம் -M I M மன்சூர் Mpc 28.06.2015 - Comments Disabled
  • Hakeem Vs. Hassan & The Future Of The SLMC31.10.2015 - Comments Disabled
  • TGTE Nominates Legal Experts To Monitor Transitional Justice Mechanisms In Sri Lanka20.11.2015 - Comments Disabled