Thursday, 11 October 2018

மாகாணசபை தேர்தல் தொடர்பில் இறுதி தீர்மானம்: கட்சிகளின் செயலாளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு அழைப்பு

மாகாண சபை தேர்தலை நடாத்துவது தொடர்பில் இறுதித்தீர்மானம் எடுக்க இன்று பிற்பகல் அரசியல் கட்சிகளின் செயலாளர்களை தேர்தல் ஆணைக்குழு அழைத்துள்ளது.

மாகாண சபை தேர்தலை புதிய முறையிலா அல்லது பழைய முறையிலா என ஆவேசமாக தீர்மானித்து அதற்கான சட்ட ஏற்பாட்டை செய்து தருமாறு அரசியல் கட்சிகளிடம் தேர்தல் ஆணைக்குழு இதன்போது கோரிக்கை விடுக்கவுள்ளது.

இதேவேளை, இன்று இடம்பெறும் கூட்டத்தின் போது மாகாண சபை தேர்தலை பழைய முறையில் நடாத்த வேண்டும் என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தவிர்ந்த ஏனைய அனைத்து கட்சிகளும் தமது நிலைப்பாட்டை தெரிவிக்கவுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எனினும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மாத்திரம் புதிய முறையில் மாகாண சபை தேர்தலை என்ற நிலைப்பாட்டில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Loading...
  • Reconciliation Is A Personal-Narrative03.01.2016 - Comments Disabled
  • உள்ளூராட்சிமன்ற தேர்தல்கள் பிற்போடப்படமாட்டாது - பைசர் முஸ்தாபா24.03.2016 - Comments Disabled
  • A Marapana-Wijeyadasa Cooked Up Drama?12.11.2015 - Comments Disabled
  • அமைச்சர்களுக்கு எதிராக வழக்கு!01.11.2015 - Comments Disabled
  • அரனாயக்கவில் முஸ்லிம் மீடியா போரத்தின் ஊடகக் கருத்தரங்கும் கவிதை நூல் வெளியீடும்17.02.2017 - Comments Disabled