Thursday, 4 October 2018

தென் மாகாணம் முழுவதும் விசேட பொலிஸ் நடவடிக்கை

போதை மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்கள் என்பவற்றை ஒழிப்பதற்கு தென் மாகாணம் முழுவதையும் உள்ளடக்கும் வகையில் விசேட பொலிஸ் நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

பொலிஸ் விசேட அதிரடிப்படை, பொலிஸ் போதை ஒழிப்புப் பிரிவு, திட்டமிட்ட குற்றச் செயல்கள் ஒழிப்புக்கான பொலிஸ் பிரிவு மற்றும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவு என்பன இதில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தலைமையகம் மேலும் அறிவித்துள்ளது.

தென் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் குற்றச் செயல்கள், போதைப் பொருள் வியாபாரம் என்பவற்றைக் கருத்தில் கொண்டு இந்த விசேட நடவடிக்கை திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் மேலும் குறிப்பிட்டுள்ளது. 
Loading...