இலங்கை மற்றும் உருகுவே ஆகிய நாடுகளே உலகில் போதைப்பொருளை ஒழிப்பது தொடர்பான சட்டங்களை பலப்படுத்தி முன்னணியில் இருக்கும் நாடுகளாகும் .என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.
சிறிமாவோ பண்டாரநாயக்க கல்லூரியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட உள்ளக விளையாட்டரங்கை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்ல்வில் இன்று கலந்து கொண்ட போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டின் எதிர்காலம் சிறுவர்களின் எதிர்காலத்திலேயே தங்கியுள்ளது. எனவே நாட்டில் இலவசக் கல்வி கடந்த மூன்றரை வருட காலமாக பலப்படுத்தப்பட்டுள்ளது. கல்வியின் எல்லை எதுவென எவருக்கும் கூற முடியாது.
எனவே மனிதனின் எதிர்காலம் தொடர்பிலும் நாட்டின் எதிர்காலம் தொடர்பிலும் எதிர்பார்ப்பு வைப்பதற்கான அடிப்படை விடயம் கல்வியாகும். அரசாங்கம் என்ற வகையில் செய்கின்ற முதலீடுகளில் நீண்டகால நன்மைகளை கொண்டு வருவது கல்வியும் சுகாதார சேவையுமாகும்.
நாட்டின் இலவசக் கல்வி மற்றும் இலவச சுகாதார துறைதான் இந்த நாட்டில் சமூக அபிவிருத்தியை கட்டியெழுப்பியுள்ளது. எப்போதும் கல்விமான்களையும் புத்திஜீவிகளையும் உருவாக்குவதற்கு கல்வி அடிப்படையாக அமைந்திருப்பதைப் போன்று ஆரோக்கியமானதொரு சமூகத்தை கட்டியெழுப்பும் பணியிலும் நாம் உலகில் முன்னணியில் இருக்கின்றோம். வேறு நாடுகளின் அமைச்சர்கள் அரச தலைவர்களுடன் பேசுகின்றபோது எமது தாய்நாட்டை பற்றி அவர்கள் பராட்டுகின்ற விடயங்கள் எமது நாட்டின் கல்வி மற்றும் சுகாதாரத் துறைகள் பற்றியதாகும்.
நாம் உலகை வெற்றிகொண்டுள்ள சில துறைகள் உள்ளன. கல்வித்துறையிலும் சுகாதாரத்துறையிலும் நாம் முன்னணியில் இருக்கின்றோம். போதைப்பொருள் ஒழிப்பு போன்ற சமூக பணிகளில் ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகாரத்தைப் பெற்ற இரண்டு நாடுகளில் எமது நாடும் ஒன்றாகும். எம்மைப்போன்ற சிறியதோர் நாடுதான் உருகுவேயாகும். இலங்கை மற்றும் உருகுவே ஆகிய நாடுகளே உலகில் போதைப்பொருளை ஒழிப்பது தொடர்பான சட்டங்களை பலப்படுத்தி முன்னணியில் இருக்கும் நாடுகளாகும்.
நான் சுகாதார அமைச்சராக இருந்தபோது நிறைவேற்றப்பட்ட சட்ட திட்டங்களும் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டு அரசாங்கத்தில் பலப்படுத்தியுள்ள சட்ட திட்டங்களின் காரணமாகவும் நாட்டில் எந்தவொரு பொது இடத்திலும் பகிரங்கமாக புகை பிடிக்க முடியாது.
இந்த விடயத்தில் பொருளாதார ரீதியாக அபிவிருத்தியடைந்த நாடுகளை பார்க்கிலும் நாம் முன்னணியில் இருக்கிறோம். அமெரிக்கா போன்ற நாடுகளில் சுகாதார சேவையில் காணப்படும் மிகப்பெரும் பிரச்சினை உளவள வைத்தியர்களுக்கான தட்டுப்பாடாகும்.
உளவள வைத்தியர்களின் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு காரணம் என்ன? உளவள மருத்துவர்கள் ஒரு நாட்டுக்கு ஏன் அதிகம் தேவையென்று நீங்கள் நினைக்கலாம். ஜப்பான் போன்ற நாடுகளை எடுத்துக்கொண்டால் அவை தொழில்நுட்ப ரீதியாக முன்னணியில் இருக்கின்றன. அங்கும் உளவள வைத்தியர்களுக்கான தட்டுப்பாடு அதிகளவில் உள்ளது.
ஐரோப்பாவில் உயர் தொழில்நுட்பம் கொண்ட நாடுகளில் இது மிக முக்கியமான பிரச்சினையாகும். தொழில்நுட்ப உபகரணங்களுடன் அதிக நேரத்தை கழித்தல். தேவையற்ற வகையில் தொழில்நுட்ப உபகரணங்ளுக்கு அடிமையாகுதல் ஆகியன முன்னேற்றமடைந்துள்ள உலகில் வாழும் மக்களுக்கு பாரிய பிரச்சினையாக மாறியுள்ளன. தொழில்நுட்பம் முன்னேற்றமடையும் போது மனிதர்கள் ரோபோக்களாக மாறி வருகின்றனர்.
மக்களின் ஆன்மீக சிந்தனைகள் வீழ்ச்சியடைகின்ற போது மனிதன் இயந்திரத்தின் நிலைக்கு மாறி விடுகின்றான். எனவே எமக்கு முன்னாள் உள்ள சவால்களை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். பரீட்சையில் சித்தியடைவது மிகவும் முக்கியமானது. உயர்ந்த அடைவுகளை பெற்று உயர்ந்த சாதனைகளைப் படைப்பதும் மிகவும் முக்கியமாகும். பரீட்சையில் சித்தியடைவது போன்று வெளிச்சமூகத்திலுள்ள சவால்களை வெற்றிகொள்ள முடியாமல் போனால் நாம் வாழ்க்கையில் தோற்றுப்போய் விடுவோம். பரீட்சையில் வெற்றி பெறுவதற்கும் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கும் இடையேயுள்ள இடைவெளியை சரி செய்வதற்கு பௌத்த தத்துவத்தில் தீர்வுகள் உள்ளன.
விளையாட்டுத் துறையிலும் நீங்கள் திறமைகளை வெளிப்படுத்த வேண்டியது அவசியமாகும். அறிவுத் தெளிவுடன் அனுபவமும் முக்கியமானதாகும். அந்த அனுபவத்தை பெற்றுக்கொள்ள நடைமுறை வாழ்க்கை அனுபவம் உங்களுக்கு அவசியம். அந்த நடைமுறை வாழ்க்கைக்கு அறிவு அவசியம். அறிவும் தெளிவும் அனுபவமும் இருக்குமானால் மனிதனின் வாழ்க்கை முழுமைபெற்றதாகும்.
சிறுவர்களின் அழகிய எதிர்காலம் பற்றிய எதிர்பார்ப்புகள் அனைத்தையும் நிறைவேற்றுவதற்காகவே நாம் நடவடிக்கையெடுத்து வருகின்றோம். இந்த நாட்டில் கல்வி கற்றுவரும் 40 இலட்சத்திற்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர்களின் பொறுப்பை ஏற்றுள்ள கல்வியமைச்சர் இலவசக் கல்வி குறித்த அரச கொள்கைக்கு முன்னுரிமை அளித்துள்ளார். நாட்டின் நாளைய எதிர்காலம் கல்வியின் மூலம் கிடைக்கும் பெறுபேறுகளிலேயே தங்கியுள்ளது.
இலங்கை இராணுவத்தினரே இந்த கட்டிட நிர்மாணப் பணிகளை மேற்கொண்டுள்ளனர். எமது படையினர் பயங்கரவாதிகளை தோல்வியுறச் செய்வதில் வெற்றிகொண்டதைப் போன்று நாட்டின் அபிவிருத்திக்கும் பாரிய பங்களிப்பை செய்து வருகின்றனர். பொலன்னறுவை மாவட்டத்தில் அனைத்து நிர்மாணப் பணிகளும் படையினருக்கே பொறுப்பளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.