எனது கனவு நினைவாகியுள்ளது நான் இந்தியாவின் டெஸ்ட் அணியில் விளையாடுவது குறித்து பெருவிருப்பம் கொண்டிருந்தேன் தெரிவுக்குழுவினர் என்னை தெரிவு செய்யும் விதத்தில் விளையாட முடியும் என நான் நம்பினேன் என மேற்கிந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளிற்காக இந்திய அணிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள முகமட் சிராஜ் தெரிவித்துள்ளார்.
இந்திய அணிக்காக ரி 20 போட்டியில் விளையாடியிருந்த சிராஜ் உள்ளுர் போட்டிகளில் சிறப்பாக விளையாடியதை தொடர்ந்து டெஸ்ட் அணிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
டெஸ்ட் அணிக்கு தெரிவு செய்யப்பட்டது குறித்து நான் மகிழ்ச்சியாக உள்ளேன், ஏ அணியில் சிறப்பாக விளையாடியதால் எனக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்தேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்திய அணிக்காக ரி 20 போட்டிகளில் விளையாடிய வேளை விராட்கோலியும் தோனியும் வழங்கிய ஆலோசனைகளே நான் டெஸ்ட் அணியில் இடம்பெறுவதற்கான காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நியுசிலாந்துடனான ரி20 போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டவேளை நான் பதட்டத்துடன் இருந்தேன், கோலி என்னிடம் கவலைப்படவேண்டாம் மைதானத்தில் பேசுவோம் என குறிப்பிட்டார்.
பின்னர் மைதானத்தில் கோலி நீங்கள் பந்து வீசுவதை பார்த்திருக்கின்றேன் அதேபோல பந்து வீசுங்கள் புதிதாக எதனையும் முயற்சிக்க வேண்டாம் என தெரிவித்தார் அதன் மூலம் அவர் எனது அழுத்தங்களை குறைத்தார் எனவும் சிராஜ் தெரிவித்துள்ளார்.
இதேபோன்று அந்த ரி 20 போட்டியில் நியுசிலாந்து வீரர்கள் என்னை அடித்து ஆடிக்கொண்டிருந்த வேளை டோனி என்னிடம் துடுப்பாட்ட வீரரின் கால் அநசவை பார்த்து அதனை அடிப்படையாக வைத்து பந்தின் போக்கை மாற்றுங்கள் என்றால் அந்த ஆலோசனை எனக்கு பெருமளவிற்கு உதவியது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனது தந்தை ஒரு முச்சக்கரவண்டிச்சாரதி அவர் என்னை கிரிக்கெட் வீரனாக்குவதற்காக அனைத்தையும் செய்துள்ளார், என சிராஜ் தெரிவித்துள்ளார்.
நான் என்றும் அவர் பெருமையடையும் நிலைக்கு உயர விரும்புகின்றேன் எனவும் முகமட் சிராஜ் தெரிவித்துள்ளார்.