பாராளுமன்ற உறுப்பினர்கள் வாகன இறக்குமதிக்கான தீர்வை வரியற்ற அனுமதிப் பத்திரங்களை பெற்று அவற்றை விற்பனையும் செய்து முடிந்துள்ள நிலையில் வாகன இறக்குமதிக்கான தீர்வை வரியற்ற அனுமதிப் பத்திரங்களைத் தடை செய்யும் சட்டங்களைக் கொண்டுவருவது பொருத்தமற்ற நடவடிக்கையாகும் என ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தெரிவித்துள்ளார்.
அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் தீர்வை வரியற்ற வாகன இறக்குமதிக்கான அனுமதிப் பத்திரங்களை எதிர்வரும் 6 மாத காலத்துக்கு நிதி அமைச்சினால் இடைநிறுத்தி வைக்க தீர்மானம் குறித்து கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
இந்த தடையைக் கொண்டுவரும் போது பாராளுமன்ற உறுப்பினர்களையும் சேர்த்துக் கொண்டிருப்பதில் எந்தவித பயனும் இல்லையெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தாம் அனுபவிக்கும் அத்தனை இன்பங்களையும் அனுபவித்து விட்டு அதனால், நாட்டுக்கும் மக்களுக்கும் பாதிப்பு வரும்போது, அப்பாதிப்புக்களுக்காக மக்களின் அனுதாபத்தைப் பெறுவதற்கே அரசாங்கம் இவ்வாறான தடைச் சட்டங்களை கண்துடைப்பாக அறிமுகம் செய்கின்றது என்பது சாதாரண பாமர மக்களினதும் அறிவுக்கு எட்டிய விடயம் என்பது குறிப்பிடத்தக்கது.