Thursday, 30 April 2015

மலாலாவை கொல்ல முயன்ற தலிபான்களுக்கு ஆயுள் தண்டனை

Malala_Y

கல்வி ஆர்வலரும் பெண்களின் கல்வி உரிமைக்காக போராடுபவருமான மலாலா யூசூப்பை சுட்டுக் கொல்ல முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 10 பேருக்கு இன்று (வியாழக்கிமை) வட- மேற்கு பாகிஸ்தான் நீதிமன்றம் ஆயுள்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
மலாலா யூசூப்பிற்கு 15 வயதாக காணப்பட்ட போது பாடசாலைக்கு ஏற்றிச் செல்லும் பேரூந்தினுள் ஏறிய ஆயுததாரிகள் அவரது தலையில் சுட்டுவிட்டு தப்பிச் சென்றிருந்தனர்.
கடந்த 2012 ஆம் ஆண்டு பாகிஸ்தான் ஸ்வட் வலே பகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மலாலா மேலதிக சிகிச்சைகளுக்காக அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டிருந்த நிலையில் தீவிர சிகிச்சையின் பின்னர் மலாலா யூசூப் உயிர் தப்பியிருந்தார்.
இதனைத்தொடர்ந்து உயிராபத்தான நிலையில் கூட மலாலா சிறுவர் மற்றும் பெண்களின் கல்வி உரிமைக்காக குரல் கொடுத்து பிரசார நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்தார்.
மலாலாவின் இந்த சிறந்த முயற்சியை பாராட்டும் விதத்தில், கடந்த 2014 ஆம் ஆண்டுக்கான சமாதான நோபல் பரிசு மலாலாவிற்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்நிலையில் மலாலாவினை கொல்ல முயன்ற குற்றத்தில் கைது செய்யப்பட்டிருந்த பாகிஸ்தான் தலிபான் தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த 10 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
மேலும் 17 வயதான மலாலா யூசூப் தற்போது தனது குடும்பத்தினருடன் பிரித்தானியா பிர்மிங்கம் பகுதியில் வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நன்றி : கனடா மிர்ரர்  
Loading...