காத்மாண்டு அருகே, நகர்கோட் பகுதியிலிருந்து சூரிய உதயத்தின் போது இமயமலைத் தொடரின் காட்சி. | கோப்புப் படம்: ஏ.பி.
புவி வெப்பமடைதல் காரணமாக 2100-ம் ஆண்டு வாக்கில் எவரெஸ்ட்டின் பனிச்சிகரங்களில் 70% பனி உருகிவிடும் என்று ஆய்வுக்கட்டுரை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஜியோ சயன்சஸ் யூனியனின் 'தி கிரயோஸ்பியர்' என்ற இதழில் வெளியாகியுள்ள, ““Modelling glacier change in the Everest region, Nepal Himalaya” (எவரெஸ்ட் பகுதி, மற்றும் நேபாள இமாலயப்பகுதிகளில் பனிச்சிகர மாற்றங்களின் மாதிரியாக்கம்) என்ற ஆய்வுக் கட்டுரையில் இத்தகவல் வெளியாகியுள்ளது.
அப்பகுதியில் அதிகரித்து வரும் வெப்ப நிலை, எவ்வளவு பசுமை இல்ல வாயு வெளியேற்றங்கள் நிகழப்போகிறது, இது எவ்வாறு வெப்ப நிலை, பனிப்பொழிவு ஆகியவற்றைத் தீர்மானிக்கும் என்பதைக் கொண்டு கணிக்கப்படும் முதல் ஆய்வு இது.
இந்த ஆய்வில் நேபாளம், பிரான்ஸ், நெதர்லாந்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் ஈடுபட்டனர். இவர்கள் இமாலயத்தின் பெரும்பாலான் பனிச்சிகரங்கள் பனியற்று வறண்டு விடும் என்று கூறியுள்ளனர்.
வெப்ப வாயுக்களான பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றம் அதிகரிக்குமானால் பனிச்சிகரங்களை அது வரும் ஆண்டுகளில் கடுமையாக பாதிக்கும். பனிச்சிகரங்களில் பெரிய மாற்றங்கள் ஏற்படும்.
“எதிர்காலத்தில் பனிச்சிகரங்களில் மாறுதல் ஏற்படுவதற்கான அடையாளங்கள் தெளிவாக உள்ளன. வெப்ப நிலை எவ்வளவு உயரும் என்ற தற்போதைய கணிப்புகளின் படியே எவரெஸ்ட்டின் பனிச்சிகரங்களின் எதிர்காலம் பிரகாசமாக இல்லை” என்று பனிசிகர நீர் ஆராய்ச்சி நிபுணர் ஜோசப் ஷிய என்பவர் கூறியுள்ளார்.
வெப்ப அதிகரிப்பு பனிமலைகளை உருகச் செய்வதோடு, பருவநிலை மாற்றங்களும் கடுமையாக பாதிக்கப்படும்.
நேபாள இமாலயத்தில் 400 சதுர கிமீ பனிச்சிகரங்களுடைய பகுதியான தூத் கோசி பகுதியில் பனிமலைகளை இவர்கள் ஆய்வு செய்துள்ளனர். பனிஉருகுதாலால் கோசி நதியின் போக்கில் பெரும் மாற்றங்கள் ஏற்படும்.
பனி உருகுதலால் தொடக்கத்தில் நீராதாரம் பெருகுவது போல் தெரிந்தாலும், கோடை காலங்களில் நீராதாரம் வற்றும். இதனால் வேளாண்மை மற்றும் நீர் மின்சாரத் திட்டங்களும் பாதிக்கப்படும்.
பனிச்சிகரங்கள் உருகுவதால் அதன் மிச்ச சொச்சங்கள் தடுப்பணை ஏற்படுத்தும் ஏரிகள் பல உருவாகும். பனிமலைச்சரிவும், பூகம்பங்களும் அணைக்கட்டுகளை உடைக்கும். பேரழிவு வெள்ள அபாயங்கள் தோன்றும். அதாவது கோசி படுகையில் நதியின் நீர்மட்டம் சாதாரண நிலையை விட 100 மடங்கு அதிகரிக்கும்.
கோசி நதியைத்தான் நாம் “பிஹாரின் துயரம்” என்று அழைக்கிறோம். இங்கு வெள்ளம் ஏற்பட்டு கடந்த காலங்களில் பெரும் அழிவுகளை ஏற்படுத்தியுள்ளது.
பருவநிலை மாற்றம் பற்றிய ஒரு பாரம்பரியமான பார்வையிலேயே பனிசிகரங்களில் இத்தகைய மாற்றம் ஏற்படுவதற்கான அடையாளங்கள் தெரிகின்றன.

என்று அந்தக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.
Thanks Hindu