
மருதநிலா நியாஸ்
இங்கு நீ, நான், அவை, அது, எல்லாம்தான் உயிருள்ளவை
உனக்கு அடர்த்தி கொஞ்சம் அதிகம்
எனக்குத் தெரியும் அதேபோல்
அது உனக்கும் தெரியும்
நீயும் நானும் ஒருவரை ஒருவர் புசித்துக்கொண்டு
ரகசியமாய் போய் ஏப்பம் விடுகிறோம்
வெட்ட வெளியில் சுதந்திரமாய்ப் பட்டம்விட
நாமெல்லாம் கனவுகண்டு
சங்கை ஊதிக் கெடுத்த கதைக்கு வாய்ப்பு வழங்கியது
அந்த நீயும் நானும்தான்
இப்போது நீயும் நானும் உணர்கிறோம்
உண்மை எதுவென்று ஆனால் அது
உனக்குள்ளும் எனக்குள்ளும் அவர்களுக்குள்ளும்
புதைந்தே கிடக்கிறது
வீதியில் இறங்கி வசீகரிக்க
எனக்கும் உனக்கும் தெரியாது
ஆனால் அது
அவர்களுக்குத் தெரியும் அது இலாபங்களுக்காகவே
கட்டப்பட்டுக் கிடக்கிறது இங்கு நீயும் நானும்
ஒரு நாள் முதலாளி பலநாள் தெழிலாளி
நான் ஒரு நம்பிக்கை கொண்டிருக்கிறேன்
உனக்கும் கூட அது இருக்கிறது
அது வேறு வேறு ஆனால் இறுதிச் சங்கமிப்பு
ஒன்றாகவே கலக்கும் அங்கு
உன்னையும் என்னையும் பலர் பார்க்கலாம்
அவர்களுக்கு அங்கு பார்ப்பதற்கும் நேரமிருக்காது.
-----------------------
