Sunday, 31 May 2015

மகிந்தரப்பினரின் இரண்டாவது திட்டம்!!!

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பிரதம வேட்பாளராக மகிந்தவை நியமிக்க முடியாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ள நிலையில், மகிந்தவுக்கு ஆதரவான தரப்பினர் இரண்டாவது திட்டத்தில் களமிறங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆங்கில ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது.

மகிந்தராஜபக்ஷவை பிரதம வேட்பாளராக நியமிக்க முடியாது என்று ஜனதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் வேறொரு கட்சியின் ஊடாக மகிந்தராஜபக்ஷவை பிரதம வேட்பாளராக நியமித்து போட்டியிட செய்யும் முயற்சிகளுக்கு அவர்கள் தயாராகியுள்ளனர்.

இதற்கு சிறிலங்கா சுதந்திர கட்சியின் பல நாடாளுமன்றஉறுப்பினர்களும் இணங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...